சத்யராஜ் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருகின்றார். இவரின் கட்டப்பா கதாபாத்திரம் இவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்.

ஆனால், 10 வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் பேசியதை கர்நாடகாவை சார்ந்த ஒரு சில அமைப்புக்கள் தற்போது சுட்டிக்காட்டி பாகுபலி-2வை தடை செய்ய கூறி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  பிரபல தயாரிப்பாளரை கொலை செய்து சாக்கடையில் திணிப்பு.. குடும்பத்தோடு கொலை செய்த கொடூரம்

ராஜமௌலியும் நேற்று பேசுகையில் நான் முடிந்த அளவிற்கு சத்யராஜிடம் பேசிவிட்டேன், அதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல் பேசினார்.

ரஜினிகாந்த் இப்படி ஒரு பிரச்சனையில் மாட்டியபோது கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்டு தன் குசேலன் படத்தை அங்கு ரிலிஸ் செய்தார்.

அதிகம் படித்தவை:  இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் டைரக்டராக அறிமுகமான முதல் படம்

அப்போது சத்யராஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார், அந்த ஒரே காரணத்திற்காக தான் சத்யராஜ் மன்னிப்பு கேட்க மறுக்கின்றாரோ என கிசுகிசுக்கப்படுகின்றது. ஹிம்ம்..எல்லாம் ஒரு வகையான ஈகோ தானே..!