Tamil Cinema News | சினிமா செய்திகள்
முகவரி இல்லாத முட்டாள்கள் தான் விமர்சிக்கிறார்கள்: சோனம் கபூர்

என்னை விமர்சிப்பவர்கள் முகவரி இல்லாத முட்டாள்கள் என நடிகை சோனம் கபூர் தனது ஹேட்டர்ஸ்களுக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். நடிகையாக தனது திரை வாழ்வை தொடங்கும் முன்னர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணியாற்றினார். அதே பன்சாலியின் சாவரியா திரைப்படத்தில் புதுமுக நடிகரான ரன்பீர் கபீருடன் இவரும் திரையில் நாயகியாக அறிமுகமானார். படத்திற்கு சரியான விமர்சனங்கள் வரவில்லை என்றாலும் சோனமின் நடிப்பு அனைவரிடமும் நல்ல பாராட்டை பெற்றது. தொடர்ந்து, பாலிவுட்டில் சோனமின் நடிப்புக்கு பல வாய்ப்புகள் தேடி வர தொடங்கின. சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான நீரஜா மற்றும் பேட்மேன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ஏகப்பட்ட விருதுகளை வாங்கி குவித்துள்ளது. நடிகையாக மட்டுமல்லாமல் சோனம் பல சமூக பிரச்சனைகளிலும் பங்கெடுத்து வருகிறார்.
சமீபத்தில் சோனம் கபூர் தனது நீண்ட நாள் காதலர் ஆனந்த் அஹிஜாவை திருமணம் செய்து கொண்டார். வெளிநாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட இருந்த திருமண நிகழ்வு, பெரியம்மா ஸ்ரீதேவியின் இறப்பால் மும்பையிலேயே சிறப்பிக்கப்பட்டது. மும்பை பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் திருமணமும் மாலை லீலா ஹோட்டலில் பிரமாண்ட திருமண வரவேற்பும் நடைபெற்றது. பாலிவுட்டை சேர்ந்த அத்தனை பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொண்டு சோனத்தை வாழ்த்தினர். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு, கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து, சோனம் பாலிவுட்டில் பிஸி நாயகியாக இருக்கிரார்.
திருமணம் முடிந்து சில நாட்களில் சோனத்தின் கழுத்தில் இருந்த தாலியை காணவில்லை. இவரும் மற்ற நாயகிகள் போல் என நினைக்கும் நேரத்தில், அவரின் கையில் தாலி பிரேஸ்லைட்டாக இருந்தது. இதற்கு ரசிகர்கள் பலர் இந்திய கலாச்சாரத்தையே சோனம் அவமதித்துவிட்டதாக கடுமையாக சாடினார்கள். தொடர்ந்து, அவருக்கு எதிர்ப்புகள் நிலவியது. இந்நிலையில், தன் மீது இருக்கும் விமர்சனத்துக்கு சோனம் முதல்முறையாக பதிலடி கொடுத்து இருக்கிறார். அதில், என்னை விமர்சிப்பவர்கள் முகவரி இல்லாத தேவையில்லாத முட்டாள்கள் என கடுமையாக சாடி இருக்கிறார்.
