புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தாய் சாய்ரா பானு அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வெளியிட்ட பதிவு

ஏ.ஆர்.ரஹாமானின் மனைவி நேற்று தங்களின் திருமண பந்தம் முடிவுக்கு வருவதாகவும், விவாகரத்து பெறவுள்ளதாகவும் அறிவித்த நிலையில் இன்று அவரது மகன் அமீர் தன் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவுடன் திருமணம் நடந்த நிலையில் இத்தம்பதிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். எல்லோருக்கும் பிடித்த ஜோடியாகவும், திரைத்துறையில் முன்மாதிரி கப்பிலாகவும் வலம் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு உறவில் திடீர் இடைவெளியே ஏற்பட்ட நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிவதாக நேற்று தன் வக்கீல் மூலம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார் சாய்ரா பானு.

பெற்றோர் பார்த்து வைத்த திருமணமான இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் மரியாதையும், பரஸ்பர மரியாதையும் கொண்டிருக்கின்றனர். இதை பல மேடை நிகழ்ச்சிகளிலும் ரசிகர்கள் பார்த்து இருவரையும் வாழ்த்தினர்.

இந்த நிலையில், இம்முடிவுக்கு காரணம் ’’இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவகாரத்து முடிவை எடுத்திருப்பதாக ’’அந்த அறிக்கையில் சாய்ரா பானு விளக்கம் அளித்திருந்தார். இது ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமான பதிவு

நேற்று இரவு சாய்ரா பானுவின் அறிக்கை வெளியானது, எல்லா மீடியாவிலும், சமூக வலைதளங்களில் இந்த செய்தியே ஆக்கிரமித்தன. இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில், ஏ.ஆர்.ரஹ்மான் தன் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், ”எங்களின் 30 வது ஆண்டுகளை நிறைவு செய்வோம் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பாராத முடிவுகள் நிகழ்ந்துள்ளன. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். உடைந்தவை மீண்டும் ஒன்று சேராது. இந்த கடினமான சூழலில் உங்கள் அன்பிற்கும் எங்களின் தனியுரிமையை மதிப்பதற்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த சினிமாத்துறையினர் மத்தியில் இது பேசுபொருளாகவும், விவாதத்தையும் எழுப்பியுள்ள நிலையில் அவர்களின் தனிப்பட்ட விவகாரத்தை ஏன் கேள்வி எழுப்பி பேச வேண்டும் என சினிமா விமர்கர்கள் கூறி வருகின்றனர்.

பெற்றோரின் விவாகரத்து குறித்து மகன் பதிவு

இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் தனது இன்ஸ்டா பக்கத்தில், ”இந்த நேரத்தில் எங்களின் பிரைவசியை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி” என்று தெரிவித்துள்ளார். அன்பான மற்றும் அமைதியான தம்பதியரான ஏ.ஆர்.ரஹ்மாந் சாய்ரா பானு தங்களில் 29 ஆண்டுகால திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News