Connect with us

Videos | வீடியோக்கள்

அஞ்சாதே தயா போல மீண்டும் மிரட்டி உள்ள பிரசன்னா.. இணையத்தில் ட்ரெண்டாகும் இரு துருவம் 2 வீடியோ

அஞ்சாதே படத்தை தொடர்ந்து இரு துருவம் 2 படத்தில் வில்லனாக பிரசன்னா மிரட்டி உள்ளார்.

நடிகர் பிரசன்னா ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படத்தில் பிரசன்னா தீனா தயாளன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.

இப்போது மீண்டும் இதே போல் வெயிட்டான கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு இரு துருவம் என்ற வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நந்தா, பிக் பாஸ் அபிராமி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Also Read : எதிர்நீச்சல் குணசேகரன் இயக்கிய 2 தரமான ஹிட் படங்கள்.. பிரசன்னாவை நடிகனாய் மாற்றிய தரமான கதை

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரு துருவம் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இதில் நந்தாவின் மனைவி அபிராமி காணாமல் போய் விடுகிறார். போலீஸ் அதிகாரியான நந்தா வேலைக்கு செல்லாமல் தனது மகளை பார்த்துக் கொள்வது மற்றும் மனைவியை தேடுவது என சுற்றித் திரிகிறார்.

மேலும் அடுத்தடுத்து பெண்கள் காணாமல் போவது மற்றும் தொடர் போலீசார் கொலை மிகப் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதை கண்டுபிடிக்க நந்தா மீண்டும் பணியில் சேருகிறார். அப்போது லங்கேஸ்வரன் என்பவர் தான் இந்த கொலைகளை செய்கிறார் என்பது நந்தாவுக்கு தெரிகிறது.

Also Read : முடியாது என மறுத்த கார்த்தி.. பிரசன்னாவை நடிக்கச் செய்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்காமல் அலைகிறார். கடைசியில் லங்கேஸ்வரனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா என்பது தான் இரு துருவம் 2 தொடரின் கதை. இந்த தொடரில் லங்கேஸ்வரனாக மிரட்டி உள்ளார் பிரசன்னா. இதை பார்த்த ரசிகர்கள் ஹீரோவை காட்டிலும் பிரசன்னாவுக்கு வில்லன் தான் பக்காவாக பொருந்துகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : பிரசன்னாவின் முன் சினேகாவை அசிங்கமாக வர்ணித்த இயக்குனர்.. புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட அவமானம்

Continue Reading
To Top