Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர் படம் என ஊரே சொல்லிய படங்கள்.. ஆனால் தியேட்டரில் ஓடவில்லை
தமிழ் சினிமாவில் சில நேரங்களில் ஒரு சில படங்களுக்கு சனி பிடித்துக்கொள்ளும். அப்படி பிடித்த சனி அந்தப் படத்தை தியேட்டரை விட்டே தூக்கிவிடும். ஆனால் மக்கள் மனதில் நின்று விடும். அப்படிப்பட்ட திரைப்படங்களை சில பார்ப்போம்.
முதலில் கமலஹாசன், மாதவன் நடிப்பில் வெளியான அன்பே சிவம். இந்த படத்தை சுந்தர் சி இயக்கினார். இந்தப் படம் திரையிட்ட பொழுது சுமாரான வெற்றியுடன் தியேட்டரை விட்டு ஓடியது. ஆனால் அந்தப் படத்தை டிவியில் பார்க்கும் போதுதான் அடடா படம் சூப்பராக இருக்கிறது என எல்லா மக்களும் வியப்படைந்தனர்.
இரண்டாவது மூடர்கூடம். புதுமுகங்களை வைத்து சிறிய முதலீட்டில் நவீன் தயாரித்து இயக்கினார். அந்த படம் திரையிட்ட போது யாருமே சென்று பார்க்கவில்லை. ஒரு வாரம் கழித்து தான் இந்த படம் சூப்பராக இருக்கிறது என மக்களிடம் சென்றடைந்தது. ஆனால் அதற்குள் தியேட்டரைவிட்டு எடுத்துவிட்டார்கள். இப்பொழுது சிடிக்களில் ஆன்லைன்களில் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.
அடுத்தது 6 மெழுகுவர்த்திகள் நடிகர் ஷாம் நடித்த இந்த படம் திரையரங்குகளில் ஓடவில்லை. ஆனால் இந்தப் படத்திற்காக ஷாம் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல இப்பொழுது அந்த படத்தை டிவியில் பார்த்து ரசிகர்கள் சினிமா ரசிகர்கள்.
அடுத்ததாக ஆரணிய காண்டம் இந்தப் படம் திரையிட்டு யாரும் பார்க்கவில்லை. ஆனால் இந்த படத்துக்காக இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது. அதில் என்ன இருக்கிறது என மக்கள் தேட இப்பொழுது டிவியிலும் ஆன்லைனிலும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தது தனுஷின் மயக்கம் என்ன இந்த படம் திரையிட்ட போது படத்திற்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை அதிலும் சரியான மழை நேரத்தில் திரையிடப்பட்டது. தியேட்டர்கள் காத்து வாங்கியது. சில நாட்கள் கழித்து மக்கள் எல்லாரும் இந்த படத்தை டிவியில் பார்க்கும்போது தான் பல நல்ல படமா இருக்கே என ஏக்கத்துடன் பார்த்தனர்.
அடுத்து கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் தனுஷ் நடித்த புதுபேட்டை. இந்த படங்களை செல்வராகவன் இயக்கி இருந்தார். இதில் புதுபேட்டை மட்டும் ஓரளவு வசூல் செய்தது. ஆயிரத்தில் ஒருவன் பெரிய நஷ்டம். ஆனால் இப்பொழுது இந்த படங்களை புகழ்ந்து பேசுவார்கள்.
