Connect with us

Cinemapettai

58 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்.. மேட்டூர் அணை நீர்மட்டம் செஞ்சுரி போட்டது

mettur-dam

Tamil Nadu | தமிழ் நாடு

58 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்.. மேட்டூர் அணை நீர்மட்டம் செஞ்சுரி போட்டது

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு பகுதியிலும் தொடர்ந்து பெய்த பலத்த மழை பெய்தது. இதனால் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன.

இதன் காரணமாக அந்த அணைகளுக்கு உதிரியாக வரும் நீர் அப்படியே தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது .

இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டியது. இதன் மூலம் 65-வது முறையாக 100 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 2 லட்சத்து பத்தாயிரம் கன அடியாக உள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டுமே சுமார் 30 அடியை தாண்டி மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக ஒகேனக்கல்லில் 58 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளக்காடாக மாறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top