Tamil Cinema News | சினிமா செய்திகள்
விரைவில் சீறவுள்ள சீறும் புலி.. அச்சு அசல் கேப்டன் பிரபாகரன் போல் கெத்து காட்டும் பாபி சிம்ஹா
தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர்தான் பாபி சிம்ஹா. இவர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாபிசிம்ஹா நடித்துள்ள ‘சீறும் புலி’ படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த போஸ்டரில் பாபிசிம்ஹா ஒரு புலியை தடவிக் கொடுப்பது போல் செம கெத்தாக அமர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார்.
அதாவது விடுதலைப் புலிகள் தலைவர் கேப்டன் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ‘சீறும் புலி’.
இந்த படத்தில் பிரபாகரனின் ஆரம்ப கால வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பற்றியும் பின்னர் அவர் எவ்வாறு தலைவராக மாறுகிறார் என்பது பற்றியும் முதல் பாகத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் விஜய் சேதுபதி ‘800’ படத்தில் இருந்து விலகியுள்ள இந்த நிலையில் ‘சீறும் புலி’ படத்தின் இயக்குனர் வெங்கடேஷ் குமார், ‘சீறும் புலி விரைவில் வெளிவரும்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இருப்பினும் இந்த பதிவிற்கு ‘தமிழ்நாட்டில் எதற்கு இலங்கை பிரபாகரனின் திரைப்படம்’ என்று பலர் எதிர்மறையான கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
