தோல்விக்கு காரணம் தோனியின் இந்த முடிவா? பளீச்சென்று பதில் தந்த பிளெமிங்

2021 ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தார் ரோஹித்.

ருத்ராஜ் துவக்கத்திலேயே அவுட் ஆக அதிரடியாக ஆடினர் டு பிளெஸ்ஸி, மொயின் அலி மற்றும் ராயுடு. இவர்களின் அரை சதத்தால் சி எஸ் கே 218 ரன்கள் எடுத்தது.

பின்னர் ரோஹித் சர்மா 35 ரன்களும், டிகாக் 38 ரன்களும் எடுத்து கொடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இதன்பிறகு ஜோடி சேர்ந்த க்ரூணல் பாண்டியா – கீரன் பொலார்டு கூட்டணி சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கீரன் பொலார்டு 34 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து இறுதி வரை நாட் அவுட் ஆக இருந்தார்.

குறிப்பாக கடைசி 16 ரன்கள் தேவை, இறுதி பாலில் இரண்டு எடுத்தால் வெற்றி, என்ற நிலையில் லாங் – ஆன் திசையில் அடித்துவிட்டு அந்த ரன்களை ஓடி எடுத்தார் பொல்லார்ட்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல விஷயங்கள் கேட்கப்பட்டது. அந்த கடைசி பந்தில் பீல்டர் மாற்றி உள்வட்டத்தில் நிறுத்தி இருக்கலாமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கேப்டன் தோனிக்கு ஆதரவாகவே பிளெமிங் பேசினார்.

“பொல்லார்ட் சிறப்பாக பந்தை டயமிங் செய்து ஆடக்கூடியவர். அவர் அடுத்து என்ன செய்வார் என ஊகிக்கமுடியாது.  2019 போல் பந்து ஸ்டம்ப்ஸில் படாதா என கூட நினைத்தேன்.

csk vs mi

அந்த கடைசி பால் என்பது மட்டுமன்றி வேறு சில போட்டி நிகழ்வுகளையும் நாங்கள் அலசி பார்க்க வேண்டும்.” என சொல்லி முடித்தார்.

சி எஸ் கே தவறவிட்ட கேட்ச், சொதப்பல் பீல்டிங், வெறும் ஒரு ஓவர் மட்டுமே மொயின் அலி வீசியது ஏன் என டீம் நிர்வாகம் விவாதிக்க வேறு சில விஷயங்களும் உள்ளது.