விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மெர்சல்’ படம் விமர்சனங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அதன் தெலுங்கு பதிப்பிற்கு நீடித்த வந்த தடை தற்போது நீங்கியிருக்கிறது.

விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அரசியல் ரீதியான ஆதரவு மற்றும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அளவில் பேசப்பட்டது.

mersal

விமர்சனங்களுக்கு இடையே `மெர்சல்’ படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க `மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ படத்திற்கு சென்சார் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படம் தீபாவளிக்கு ரிலீசாகவில்லை.

`மெர்சல்’ பிரச்சனையால் அதிரிந்தி படத்திற்கு சென்சார் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், `அதிரிந்தி’ படத்திற்கு தணிக்கைகுழு `யு/ஏ’ சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

அதிகம் படித்தவை:  மெர்சல் - மாச்சோ என்னாச்சோ - பாடல் வரிகள் வீடியோ இதோ உங்களுக்காக.
mersal

இதனை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவம் சார்பில் ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் விரைவில் ரிலீசாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

mersal

தீபாவளிக்கு வெளியாகி தற்போது வரை தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மெர்சல். அதுவும் வெளியாகி 14 நாட்களிலேயே 210 கோடிகள் வசூல் செய்துவிட்டது மெர்சல்.

வெளியான சில குறைந்த நாட்களிலயே 200 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் மெர்சல் தான். மேலும், விஜய்க்கு இது முதல் 200 கோடி வசூல் செய்த படமாகும்.

அதிகம் படித்தவை:  இதுமட்டும் வேண்டாம் – இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்த விஜய்!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி என்றால் விஜய், அஜித்திற்கு தான். எப்போதும் இவர்கள் பட்டதின் வசூலை இவர்களே மாறி மாறி உடைப்பார்கள்.

mersal

அந்த வகையில் தற்போது வெளிவந்த மெர்சல் கர்நாடகாவில் ரூ 13 கோடி வசூலை தாண்டியுள்ளது.இதற்கு முன் அஜித்தின் வேதாளம் ரூ 12 கோடி வசூல் செய்ததே அங்கு ரஜினி படத்திற்கு பிறகு அதிக வசூலாக இருந்தது.

இதை முறியடித்தது மட்டுமில்லாமல் அஜித் சாதனையை ஒரே வாரத்தில் மெர்சல் தகர்த்துள்ளது.