தமிழக வெற்றி கழகத்தின் கொடி, கழக பாடல் வெளியீடு.. மாஸ் அப்டேட் கொடுத்த தளபதி

Thalapathy Vijay: தளபதி விஜய் ரசிகர்கள் எந்த நாளுக்காக காத்திருந்தார்களோ, அந்த நாள் அவர்களுக்கு கைகூடி வந்திருக்கிறது. விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது கடந்த இரண்டு வருடங்களாகவே அரசியல் புரசலாக பேசப்பட்ட விஷயம் தான்.

இந்த விஷயத்தை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி விஜய் உறுதிப்படுத்தினார். தன்னுடைய அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக்கழகம் எனவும், தன்னுடைய தரப்பில் இருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு படங்களில் நடித்த பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவில் நடக்கும் நிறைய சமூக பிரச்சனைகளுக்கு தன்னுடைய கழகத்தின் தலைவராக அறிக்கை வெளியிட்டிருந்தார். என்னதான் அரசியல் கட்சி ஆரம்பித்து இருந்தாலும் விஜய் எப்போது மாநாடு வைப்பார், அவருடைய கொடி என்ன என்றெல்லாம் அவருடைய ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

மாஸ் அப்டேட் கொடுத்த தளபதி

2026 ஆம் ஆண்டு தேர்தல் தன்னுடைய இலக்காக இருந்தாலும் விஜய் இன்னும் தன்னுடைய அரசியல் கட்சியின் மாநாடு பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை.

அரசியல் மேடையில் பேச போகும் விஜய்க்காக தமிழக மக்களும் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 22ஆம் தேதி தன்னுடைய கட்சி கொடியை அறிமுகப்படுத்துவதோடு, கழகத்தின் கொடி பாடலையும் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

TVK
TVK

இந்த விஷயமே அவருடைய ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்திருக்கும் நிலையில் அடுத்து அவருடைய நடிப்பில் ரிலீசாக இருக்கும் GOAT படத்தின் ரிலீஸ் தேதியோடு படம் எத்தனை மணி நேரம் ஒளிபரப்பாகும் என்ற தகவலும் வெளியில் வந்திருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் மொத்தம் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்களுக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. GOAT படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

சோசியல் மீடியாவில் வைரலாகும் தளபதி 69 மாஸ் அப்டேட்

Next Story

- Advertisement -