நல்ல கதை அமைந்தும் வெற்றி பெறாத 5 படங்கள்.. இதுல விருது வாங்கியும் அதிர்ஷ்டம் இல்லாத ஆர்யா

பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றிபெற வேண்டுமென்றால் நல்ல கதை இருந்தால் மட்டும் போதும் என்ற ஒரு கருத்து உண்டு. இதெல்லாம் சில காலங்களுக்கு முன்பு வரை தான். தற்போது நல்ல கதை இருந்தால் கூட அந்த படம் எதிர்பார்த்த அளவு வசூல் சாதனை புரிவது கிடையாது.

அந்த படங்களுக்காக நடிகர்கள் கஷ்டப்பட்டு தங்களை வருத்திக்கொண்டு நடித்திருப்பார்கள். ஆனால் விமர்சனரீதியாக பாராட்டை பெற்ற அந்த படங்கள் வசூல் ரீதியாக தோல்வியையே தழுவி இருக்கும். அப்படிப்பட்ட சில திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்

மௌனகுரு: வம்சம் திரைப்படத்தின் மூலம் பல பாராட்டுகளைப் பெற்ற அருள்நிதி இந்த திரைப்படத்தில் ஒரு கல்லூரி மாணவராக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக நடிகை இனியா நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படம். இதில் அருள்நிதி காவல்துறையினரால் பாதிக்கப்படும் ஒரு அப்பாவி கேரக்டரில் நடித்திருப்பார். பல நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் வசூலில் தோல்வியை தழுவியது.

மகாமுனி: நான் கடவுள் திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா மீண்டும் தன் நடிப்புத் திறமையை காட்டி இருக்கும் திரைப்படம் இது. இதில் அவர் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். அவருக்கு ஜோடியாக இந்துஜா, மகிமா நம்பியார் நடித்திருந்த இந்த திரைப்படம் விமர்சனரீதியாக பாராட்டை பெற்றது. ஆனால் ஆர்யா தன் திறமையை கொட்டி நடித்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

ஜோக்கர்: ராஜுமுருகன் எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக பலரின் பாராட்டையும் பெற்ற இந்தத் திரைப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. ஆனால் பாராட்டு பெற்ற அளவுக்கு இப்படம் வசூல் சாதனை புரியவில்லை.

நீர்ப்பறவை: விஷ்ணு விஷால், நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சுனேனா உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படத்தை சீனுராமசாமி இயக்கி இருக்கிறார். மீனவர்களின் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. பல நல்ல கருத்துக்களையும், விமர்சனங்களையும் பெற்ற இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

தெகிடி: அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ் நடித்த இந்த திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம். பல சஸ்பென்ஸ் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் பாராட்டு கிடைத்த அளவுக்கு படத்துக்கு வெற்றி கிட்டவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்