தமிழக மக்களுக்கு ஒரு ஐந்து கேள்விகள் முன் வைப்பதாக நடிகர் சிம்பு ஒரு அறிக்கை விட்டுள்ளார்.

கேள்வி 1

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார், இந்த 75 நாட்களில் ஒருமுறைகூட ஊடகங்களை சந்திக்காத குற்றவாளி சசிகலா கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 75 தடவைக்கும் மேலாக ஊடகங்களை சந்திப்பதற்காக நோக்கம் என்ன???

கேள்வி 2

முதல்வர் பன்னீர்செல்வம் கையை வெட்டுவேன் என கலையரசன் சொல்கிறார். தங்களுக்கு அரசியல் நாகரீகம் தான் தெரியாது என்று நினைத்தோம். ஆனால் தனிமனித ஒழுக்கம் கூட தெரியாமல் போய் விட்டதா?

உண்மையில் உங்களுக்கு வாக்களித்த நாங்கள் தான் எங்களின் கைகளை வெட்டிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் என் கையை வெட்டிக் கொள்வேன்.

கேள்வி 3

ஆளுனர் பதவி ஏற்க அழைக்கும் வரை கூவத்தூர் விடுதியை விட்டு வெளியேற மாட்டோம். உண்ணாவிரதப் பேராட்டம் கூட இருப்போம் என்று கூறியுள்ளார் நவநீத கிருஷ்ணன். இதே நிலைப்பாட்டை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ஏன் எடுக்கவில்லை ???

கேள்வி 4

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திரு. பன்னீர்செல்வம் அவர்களை ஏற்றுக்கொள்ளாத MLA க்கள் , குற்றவாளி சசிகலா அடையாளம் காட்டும் அவரது குடும்ப உறுப்பினர்களை ( அம்மா அவர்களால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் ) ஏற்றுக்கொள்வது ஏன்? ??

கேள்வி 5

கூவத்தூர் விடுதியில் தங்கி இருக்கும் MLA க்களுக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை மற்றும் மனசாட்சியே இல்லையா? ??

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்,உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். எனக்கு மெயில் பண்ணுங்கள் என்கிறார் நடிகர் சிம்பு.