காமெடியன்கள் செண்டிமெண்டாக அழு வைத்த 5 படங்கள்.. முரளியுடன் கண்ணீர் வரவழைத்த வடிவேலு

பொதுவாகவே தமிழ் சினிமாவில் கதைகள் எவ்வளவு முக்கியமோ அதற்கு ஏற்ற மாதிரி அந்த படத்தில் நகைச்சுவையும் ரொம்ப முக்கியம். அப்படிப்பட்ட நகைச்சுவைக்கு அதிக அளவில் பெயர் பெற்றவர் சில காமெடியன்கள். ஆனால் அவர்களையும் சில படத்தில் சென்டிமென்டாக பேசி, நம் கண்களில் கண்ணீர் வர வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட படங்களை பார்க்கலாம்.

மாயாண்டி குடும்பத்தார்: ராசு மதுரவன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு மாயாண்டி குடும்பத்தார் என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி, பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும். இதில் மணிவண்ணன், மாயாண்டி என்ற கதாபாத்திரத்தில் பொறுப்புள்ள அப்பாவாக நடித்திருப்பார். இதில் மணிவண்ணனின் நடிப்பு உணர்ச்சிப்பூர்வமாக நெகிழ வைத்திருக்கும்.

Also read: வடிவேலு எண்ட்ரியால் காண்டான கவுண்டமணி.. நெஞ்சிலேயே மிதித்து விரட்டிய சம்பவம்

பூவெல்லாம் உன் வாசம்: எழில் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் அஜித், ஜோதிகா, நாகேஷ், சிவகுமார், விவேக் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இரண்டு குடும்பங்கள் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக நட்புடன் இருப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் விவேக், அவர்களின் வீட்டு வேலையை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் இவருடன் நகைச்சுவைக்கு அப்பாற்பட்டு செண்டிமெண்டிலும் நடித்து மக்களை கவர்ந்திருப்பார்.

சின்ன கவுண்டர்: ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு சின்ன கவுண்டர் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் கவுண்டமணி காமெடியாக நடித்து இருந்தாலும், சுகன்யா மற்றும் விஜயகாந்த் காக அதிகமான இடத்தில் செண்டிமெண்டாக பேசி இருப்பார்.

Also read: வடிவேலுவை அப்பவே சோலி முடிச்சிருப்பேன்.. எனக்கு மூணு பொம்பள புள்ளைங்க, கடுமையாக விமர்சித்த நடிகர்

வெற்றிக் கொடி கட்டு: சேரன் இயக்கத்தில் 2000 ஆண்டு வெற்றிக் கொடி கட்டு திரைப்படம் வெளிவந்தது. இதில் முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா மற்றும் சார்லி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் சார்லி குடும்பத்திற்காக வெளிநாட்டு செல்லும் முயற்சியில் ஏமாற்றம் அடைந்திருப்பதை உணர்ச்சிப்பூர்வமாக பேசி நடிப்பை வெளி காட்டி இருப்பார். முக்கியமாக மனோரமாவை சமாளிக்கும் காட்சியில் தன்னைத்தானே பைத்தியக்காரன் போல மாற்றிக்கொண்டு நடித்தது, நம் கண்களில் கண்ணீர் வரவைத்து இருக்கும். அந்த அளவிற்கு எதார்த்தமாக நடித்திருப்பார்.

பொற்காலம்: சேரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு பொற்காலம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் முரளி, மீனா, சங்கவி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தார்கள். இப்படம் ஒரு கிராமத்தில் ஊனமற்ற பெண் படும் கஷ்டத்தையும் மற்றும் சமூகம் அவரை எப்படி பார்க்கிறது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் வடிவேலு காமெடியன் என்று சொல்வதை விட முரளிக்கு இணையாக ஒரு நடிகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் கிளைமேக்ஸ் காட்சியில் முரளியுடன் சேர்ந்து வடிவேலு அழும் காட்சியில் நம்மளை அறியாமல் நம் கண்களையும் கலங்க வைத்திருப்பார்.

Also read: உங்க பருப்பு இங்க வேகாது.. விவேக், வடிவேலு ரெண்டு பேருக்கும் தண்ணி காட்டிய நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்