Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

ஐபிஎல்லிற்கு குட் பாய் சொல்லும் ஐந்து முக்கிய சர்வதேச வீரர்கள்..!

பரபரப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் ஐபிஎல் நடப்பு தொடரில் அதிக இளம் வீரர்களே சோபித்து வரும் நிலையில், பல புகழ்பெற்ற சர்வதேச வீரர்கள் சற்று தடுமாறியே வருகின்றனர். இதனால், இந்த தொடருடன் இவர்கள் வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி வெளியேறும் பட்டியலில் டாப் 5 இடங்களில் இருக்கும் வீரர்கள் குறித்து தெரிந்து தான் கொள்வோமே!

ஐபிஎல் 11வது சீசனில் வெற்றிகளை குவித்து வரும் அணிகளுக்கு இடையில் சில அணிகளுக்கு பெரும் தடுமாற்றமாகவே இருக்கிறது. அதில், டெல்லி அணியின் கேப்டனாக இருந்த காம்பீர் அணியின் தோல்விக்கு நானே முழு பொறுப்பு என தெரிவித்து விலகினார். 2009ல் இருந்து கடந்த வருடம் வரை கொல்கத்தா அணியில் கேப்டனாக இருந்தவர். கேப்டன் பொறுப்பில் இருந்தவர்களிலே அதிக ரன்களை எடுத்தவரும் காம்பீர். ஆனால், இந்த ஐபிஎல் சீசனில் சம்பளம் வேணாம் என ஒதுங்கியவர் கடந்த இரண்டு ஆட்டங்களிலும் களமிறங்கவில்லை.

ஐபில் நடப்பு தொடரில் சென்னை சூப்பர் சிங்ஸின் அணிக்காக விளையாடும் ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தை விட அவரின் டூவிட்கள் அதிகம் சோபிக்கிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஹர்பஜன் 17.5 ஓவர்கள் வீசி 136 ரன்கள் விட்டு கொடுத்து இருக்கிறார். ஆனால், 3 விக்கெட்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். சர்வதேச வீரரான ஹர்பஜனின் ஒரிஜினல் வெர்ஷன் இது இல்லை என்பதே உண்மை.

இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தவர் யுவராஜ் சிங். ஐபிஎல்லின் தொடக்கம் முதலே பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் யுவராஜ் பல ஆண்டாகவே பார்ம் இழந்து தவிக்கிறார். 6 பாலில் 6 சிக்ஸ் அடித்து சாதனை படைத்த யுவராஜை மோசமான சாதனைகளை மட்டுமே படைத்து வருகிறார். இந்த நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் இதுவரை 50 ரன்னை மட்டுமே தொட்டு இருப்பது இந்திய ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.

ஆல் ரவுண்டர் என்ற பெயரில் சென்னை அணியால் தக்க வைக்கப்பட்டவர் ரவீந்திர ஜடேஜா. ஆனால், இந்த ஐபில் நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 8 போட்டிகளிலும் சேர்த்தே 47 ரன்கள் தான் எடுத்து இருக்கிறார். 6 போட்டிகளில் 14 ஓவரை வீசி இருக்கும் ஜடேஜா 115 ரன்களை விட்டு கொடுத்து இருக்கிறார். ஆனால், விக்கெட்டோ சொற்பமாக 2 தான். தோனியின் அபிப்ராயத்தையும் மீறி அதிக விமர்சனங்களால் அடுத்த தொடரில் களமிறங்க மாட்டார் என்றே தெரிகிறது.

சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் யூசப் பதான். அதிரடி ஆட்டத்தால், சிறப்பான பந்து வீச்சாலும் இந்திய அணியில் இடம் பெற்றவர். ஆனால், இந்த சிறப்புகளை எல்லாம் இந்த நடப்பு தொடரில் கண்ணால் பார்க்கவே முடியவில்லை. 7 போட்டிகளில் 147 ரன்கள் எடுத்து இருக்கிறார். வயதும் 35ஐ நெருங்கி கொண்டு இருப்பதால் இவருக்கும் அடுத்த ஐபிஎல் சந்தேகமே!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top