5 லட்சத்தை பறிகொடுத்த சரவணன்.. சந்தியாவின் போலீஸ் மூளைக்கு வேலை வந்துருச்சு

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் படிக்காத கணவரை எப்படியாவது முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐஏஎஸ் படித்த துடிக்கும் மனைவியின் போராட்டமான கதை. எனவே இந்த சீரியலின் சமையல் கலைஞரான கதாநாயகன் சரவணனை தென்காசியில் இருந்து சென்னையில் நடத்தப்பட்ட சமையல் போட்டியில் கலந்து கொள்ள வைத்து 5 லட்சம் பரிசுத் தொகையையும் சந்தியா வாங்கி தந்துள்ளார்.

இந்தப் பணத்திற்காக வீட்டில் இருப்பவர்கள் ஆளுக்கு ஒரு பிளான் போட்டனர். ஆனால் சந்தியா இந்த பணத்தை வைத்து ஜவுளிக்கடை மற்றும் ஸ்வீட் கடை இரண்டையும் விரிவுபடுத்தி, தங்கச்சி மீனாவின் கல்யாணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி அதை குடும்பத்தினரையும் ஒத்துக் கொள்ள வைத்தார்.

இந்நிலையில் சரவணனின் தம்பி ஆதி, ரூபாய் ஒன்றரை லட்சத்திற்கு மொபைல் வாங்கி தருமாறு சரவணனிடம் கேட்க, அதை சந்தியா மறுத்துவிட்டார்.  இதனால் கடும் கோபம் அடைந்த ஆதி, சந்தியா சரவணன் ரூமின் அலமாரியில் வைத்திருந்த சரவணனின் ஐந்து லட்சத்தை இரவில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது திருடி விட்டார்.

இதை அர்ச்சனா பார்த்துவிட, ஆதி மற்றும் அர்ச்சனா இருவரும் அந்த 5 லட்சம் பணத்தை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு ‘வேலியே பயிரை மேய்ந்த கதை போல’ சரவணன் கஷ்டப்பட்டு சமையல் போட்டியில் வெற்றி பெற்று சம்பாதித்த ஐந்து லட்சத்தை ஆதி திருடி இருப்பது வீட்டில் இருப்பவர்களுக்கு மறுநாள் காலை தெரிந்துவிடுகிறது.

அலமாரியில் வைத்த பணம் வெளியில் இருப்பவர்களால் திருடாமல் வீட்டில் இருப்பவர்களால் திருடப்பட்டுள்ளது என்பதை சந்தியா தன்னுடைய போலீஸ் புத்தியால் கண்டுபிடித்து விடுகிறார். அதன்பிறகு அர்ச்சனா மற்றும் ஆதி இருவரின் பக்கம் சந்தியாவின் சந்தேகப் பார்வை  திரும்பிட, திருட்டுப் போன பணத்தை திரும்ப கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் அளிப்பார்.  அதன்பிறகு ஆதியே அந்தப் பணத்தை சரவணன் சந்தியாவிடம் வழங்கப்போகிறார்.

எனவே தொடர்ந்து சந்தியா தன்னுடைய போலீஸ் மூளைக்கு வேலை கொடுப்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் வீட்டாரிடம் விரைவில் அவரது ஐபிஎஸ் கனவை தெரிவித்து சரவணனின் ஒத்துழைப்பில் ஐபிஎஸ் படிப்பை தொடர உள்ளார். மேலும் சந்தியாவின் அண்ணன் அவ்வப்போது சரவணனிடம் உன்னுடைய கனவை சொல்லிவிடு என்று அடிக்கடி வலியுறுத்துகிறார். எனவே விரைவில் சந்தியா தன்னுடைய ஐபிஎஸ் கனவை சரவணனிடம் சொல்வதற்கு தக்க சமயம் எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்