சிம்புவின் சினிமா கேரியரை க்ளோஸ் பண்ண 5 படங்கள்.. மீண்டும் வாழ்வு கொடுத்த வெங்கட் பிரபு

சிம்பு சினிமாவில் சிறு வயதிலிருந்து நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனாலும் இவரால் இப்போது வரை ஒரு டாப் ஹீரோக்களில் ஒருவராக வர முடியவில்லை. இதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுத்த சில படங்களின் கதைகள் தான். அது என்னென்ன படங்கள் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

ஒஸ்தி: இது ஏற்கனவே பாலிவுட்டில் வந்த படம். இதை தமிழில் ரீமேக் செய்து 2011 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் சிம்புவும்,ரிச்சாவும் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் முதன் முதலில் போலீஸ் அதிகாரியாக வந்திருப்பார். ஆனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடத்தில் ஒரு கலவையான விமர்சனம் தான் கிடைத்தது.

Also read: செட்டாகாத சுந்தர்-சியின் அறுத பழசான ஃபார்முலா.. மொக்கை வாங்கிய 6 காமெடி படங்கள்

இது நம்ம ஆளு: இந்தப் படம் பாண்டியராஜ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தை இவரது அப்பா டி.ராஜேந்திரன் தான் வெளியிட்டு இருப்பார். இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார் குறளரசன். இந்த படத்திற்காக குடும்பத்தில் இருக்கிறவங்க பாடுபட்டாலும் இதற்கு கிடைத்த விமர்சனங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. இது பாக்ஸ் ஆபீஸில் சராசரி வெற்றியை மட்டும் தான் பெற்றது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்:  இந்த படம் 2017 ஆம் ஆண்டு ஆதிக்.ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்திருப்பார். இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்திருப்பார். இந்த படத்தில் இடைவேளைக்கு முன்னாடி ஓரளவுக்கு படம் நல்லா இருந்தாலும் அதுக்கு அப்புறம் இந்த படம் வேஸ்ட்ங்கிற மாதிரி தான் கதையை கொண்டு போய் விட்டார் இயக்குனர். இந்த படத்தில் பெரிய மைனஸ் ஆக இருந்தது சிம்பு குண்டாக தோற்றம் அளித்தது தான் ரசிகர்களிடையே முகம் சுளிக்க வைத்தது.

Also read: சிம்புவுக்காக 3 மாதம் காத்திருக்கும் மிஷ்கின்.. சீக்ரெட்டாக நடக்கும் ட்ரைனிங்

வந்தா ராஜாவாக தான் வருவேன்: சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். பொதுவாகவே சுந்தர் சி படம் என்றாலே மக்களிடத்தில் பெரிய வரவேற்பு கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் எந்தவித லாஜிக்கும் இல்லாமல் போய்விட்டது. இதுவே மக்களிடத்தில் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

ஈஸ்வரன்: 2021 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து பொங்கல் அன்று இந்தப் படம் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த படம் ஒரு முழுமையான கதைகளத்தோடு இல்லாமல் இருப்பதை இந்த படத்திற்கு கிடைத்த பெரிய மைனஸ். இந்த படத்தை சீக்கிரம் முடிக்கணும் என்று கட்டாயத்தில் அவசரமாக எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை.

இப்படி சினிமாவில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து இவரது கேரியரை க்ளோஸ் பண்ணியது. ஆனால் இவருக்கு கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாநாடு.  இந்த படத்தின் மூலம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது.  இதன் மூலம் சிம்பு விட்ட இடத்தை சினிமாவில் பிடித்து விட்டார்.  இவருக்கு மீண்டும் வாழ்வு கொடுத்தது வெங்கட் பிரபு தான்.

Also read: வெங்கட் பிரபுவின் தாராள மனசுக்கு வந்த சிக்கல்.. உதவி இயக்குனர்கள் வயிற்றில் அடித்த பரிதாபம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்