பாடல்களே இல்லாமல் ஹிட்டடித்த 5 படங்கள்.. திரைக்கதையில் மிரளவைத்த இயக்குனர்கள்

சினிமாவில் பாடல்களுக்காகவே படங்கள் ஹிட்டான வரலாறும் உண்டு. அவ்வாறு தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பாடல்களுக்கு என்று தனி இடம் உண்டு. ஆனால் சில படங்கள் பாடல்களே இல்லாமல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. அப்படி பாடல்களே இல்லாமல் ஹிட்டடித்த 5 படங்களை பார்க்கலாம்.

துப்பறிவாளன் : மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா, வினய் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இப்படத்திற்கு அர்ரோல் கோரேல்லி இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு பின்னணி இசை தவிர பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

கைதி : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் பின்னணி இசை ரசிகர்களை மிரள செய்தாலும் படத்தில் ஒரு பாடல் கூட இடம்பெறவில்லை.

சூப்பர் டீலக்ஸ் : விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டார்க் காமெடி படமாக வெளியான இப்படத்தில் ஒரு பாடல் கூட இல்லை.

பயணம் : ராதாமோகன் இயக்கத்தில் நாகஅர்ஜுன், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் பயணம். இப்படத்தில் மேலும் பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். பயணம் படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு பிரவின் மணி பின்னணி இசை அமைத்திருந்தார்.

உன்னைப்போல் ஒருவன் : சக்ரி டோலேட்டி இயக்கத்தில் கமலஹாசன், சந்திரஹாசன், மோகன்லால் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் உன்னைப்போல் ஒருவன். இப்படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பின்னணி இசை அமைத்திருந்தார். ஆனால் இப்படத்தில் பாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

Next Story

- Advertisement -