புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

லோகேஷ்-க்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 5 படங்கள்.. 10 முறைக்கு மேல் பார்த்த கமலின் மூன்று படங்கள்

எங்க திரும்பினாலும் பரபரப்பாக பேசப்படும் இயக்குனராக லோகேஷ் இருக்கிறார். இவர் இயக்கத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று முன்னணி நடிகர்கள் இவரை தேடி வருகிறார்கள். ஆனால் இவருக்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் இருக்கிறது. அதிலும் முக்கியமாக கமல் படத்தை பத்து முறைக்கு மேல் பார்த்து பெரிய அளவில் இம்ப்ரஸ் ஆகி இருக்கிறார்.

நாயகன்: மணிரத்தினம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், சரண்யா, ஜனகராஜ் மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் வேலு என்ற ஒரு சாதாரண மனிதன் அவனது வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் அவர் டான் ஆக மாற்றப்படுவதை கதையாக அமைந்திருக்கும். இந்த படத்தை பார்க்கும்போது நம்மளையே அறியாமல் மெய்சிலிர்க்க வைக்கும். அந்த அளவிற்கு எதார்த்தமாகவும், தத்துரூபமாகவும் நடித்திருப்பார். அத்துடன் இயக்குனர் லோகேஷ் 10 தடவைக்கும் மேல் பார்த்து இம்ப்ரஸ் ஆகி இருக்கிறார்.

Also read: இரண்டு பக்கமும் ரஜினிக்கு கொடுக்கும் நெருக்கடி.. ரேசில் இருந்து விலகும் உலக நாயகன்

இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், சுகன்யா, மனிஷா கொய்ராலா மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் கமல் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். ஒன்று ஊழலை தட்டிக் கேட்கும் ஒரு விழிப்புணர்வுடன் முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரராக இந்தியன் தாத்தாவாகவும், மற்றொன்று அவர் மகன் லஞ்சம் வாங்கிக் கொண்டு தவறுகளை செய்யும் விதமாக இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இப்படத்தில் உள்ள கதையும் மற்றும் கமல் நடிப்பையும் பார்த்து மிகவும் வியந்து இன்ஸ்பிரேஷன் ஆயிருக்கிறார் இயக்குனர் லோகேஷ்.

கில்லி: தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு கில்லி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் கபடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளியூருக்கு சென்றபோது அங்கே த்ரிஷா பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அவரைக் காப்பாற்றும்  விதமாக படம் அமைந்திருக்கும். இதில் விஜய்யின் நடிப்பை பார்த்து மிகவும் வியந்து இருக்கிறார் லோகேஷ்.

Also read: மொத்த பேர் கண்ணிலையும் மண்ணைத் தூவிய லோகேஷ்.. மும்பையில் இருந்து ரகசியமாய் ஊடுருவிய வில்லன்

எந்திரன்: சங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு எந்திரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் மற்றும் அதை வெளிப்படுத்தும் திறனை கொடுக்கும் வகையில் ஒரு ரோபோட் வைத்து கதை அமைந்திருக்கும். இதை பார்த்த லோகேஷ் இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா என்று நினைத்திருக்கிறார்.

சத்யா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு சத்யா திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், அமலா, ராஜேஷ் மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வேலையில்லாத ஒரு இளைஞன் அவன் கண்ணுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் அநீதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் தட்டிக் கேட்கும் விதமாக இக்கதை அமைந்திருக்கும். இதை பார்க்கும் நம்மளுக்கு ஒருவிதமான உணர்ச்சியை தூண்டும் என்றால் இயக்குனராக வரவேண்டும் என்று ஆசையில் இருக்கும் லோகேஷுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருந்திருக்கிறது.

Also read: லோகேஷுக்கு வலை விரித்து இருக்கும் 3 ஸ்டார்கள்.. 50 கோடியுடன் காத்திருக்கும் பாலிவுட் நடிகர்

- Advertisement -

Trending News