2022ஆம் ஆண்டு வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. சென்சார் போர்டை குஜால் ஆக்கிய பார்த்திபன்

தமிழ் சினிமாவில் குழந்தைகளின் மனோபக்குவத்திற்கும் எதிர்மறையான கருத்துக்களை உடைய காட்சிகள் மற்றும் வன்முறை சார்ந்த வசனங்கள், இரட்டை அர்த்தமுடைய வசனங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும் படங்களுக்கு “ஏ” சர்டிபிகேட் வழங்கப்படும். அப்படி 2022-ல் வெளியான ஐந்து “ஏ” சர்டிபிகேட் வாங்கிய படங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது.

இரவின் நிழல்: இந்த ஆண்டு ஜூலை 15ல் வெளியான பரபரப்பூட்டும் சிங்கிள் ஷாட் படமாகும். இதற்கு முன் 1999 இல் வெளியான சுயம்வரம் படத்தில் பல திரைப்பட இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய இத்திரைப்படம் பல திரைப்பட நடிகர்களின் நடிப்பிலும் வெளிவந்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்ற முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் ஆகும். இதனைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கத்தின் இரவின் நிழல்கள் சிங்கிள் சார்ட் படமாக வெளியாகி உள்ளது. இதனை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கியுள்ளார்.

படத்தில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ரூத் மற்றும் பிரகிதா சாகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நான்லீனியர் சிங்கிள் ஷார்ட் படத்திற்காக ஆசிய சாதனை மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இப்படம் இடம் பிடித்துள்ளது. கான் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு அனுப்பப்பட்ட திரைப்படங்களில் இரவின் நிழல் படமும் ஒன்றாகும். முகம் சுளிக்க கூடிய வகையில் சில காட்சிகள் அமைந்துள்ளதால் இப்படத்திற்கு “ஏ” சர்டிபிகேட் வழங்கியுள்ளது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸ்-இல் அதிக வசூல் சாதனை படைத்துள்ளது.

Also Read: அவார்டு, வசூல் என அள்ளி குவித்த இரவின் நிழல்.. ஆனாலும் சூடுபட்டு விட்டேன் என புலம்பிய பார்த்திபன்

அனல் மேலே பனித்துளி: இந்த ஆண்டு நவம்பர் 18ல் இயக்குனர் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, அழகம்பெருமாள், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பாலியல் வன்கொடுமையும் சமூகமும் தவறவிட கூடாத ஒரு அழுத்தமான படைப்பாகும். தன்னுடைய உடலை தனக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் ஒரு பெண்ணின் சீற்றமே “அனல் மேலே பனித்துளி”.

இதில் ஆண்ட்ரியா மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை நிலைநாட்டி இருப்பார். இதன் மூலம் ஒரு பெண் சமூகத்தில் தனது நீதியை எவ்வாறு நிலை நாட்ட வேண்டும் என்பதையும் மானம் என்பது பெண்களுக்கு மட்டும் உடையது அல்ல ஆண் பெண் என இருவருக்கும் உடையது என்பதை குறிக்கும் வகையில் ஒரு விழிப்புணர்வு படமாக இந்த அனல் மேல் பனித்துளி படமானது அமைந்துள்ளது. குழந்தைகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக அமைந்துள்ளதால் இப்படத்திற்கு“ஏ” சர்டிபிகேட் வழங்கியுள்ளது.

நட்சத்திரம் நகர்கிறது: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷார விஜயன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் முற்றிலும் அரசியல் கலந்த காதல் படமாக வெளியாகி உள்ளது. சினிமாவில் சாதிக்க நினைக்கும் கலையரசன் கூத்துப்பட்டறைக்கு சென்று அங்கு இருக்கும் பல பேருடன் இணைந்து ஒரு காதல் டிராமாவை போட திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் எடுக்கும் டாப்பிக்கை வைத்தே காதல் என்கின்ற அற்புத உணர்வின் மூலம் சமூகம் செய்யும் அரசியலை இதன் மூலம் விளக்குகின்றன. இதுவே நட்சத்திரம் நகர்கிறது படத்தின் கதை. இந்தப் படத்திற்கு தண்ணிக்குழு “ஏ” சான்றிதழ் அளித்துள்ளது.

சாணி காகிதம்: இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைப்பில் வெளியான ஒரு அதிரடி திரைப்படம் ஆகும். 1979 ஆம் காலகட்டத்தில் படத்தின் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

சமூகத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு நிலவி வரும் நிலையில் அடித்தட்டு மக்களை இழிவாக பேசி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு கம்பெனியின் முதலாளியை தட்டி கேட்கும் கீர்த்தி சுரேஷின் கணவரை பழி வாங்குவதற்காக அவர்களின் வீட்டிற்கு தீ வைக்கின்றனர். அனைத்தையும் பறி கொடுத்த பெண் எவ்வாறு அனைவரையும் பழி வாங்குகிறாள் என்பதே படத்தின் கதையாக அமைந்துள்ளது. இவை சமூகத்தில் வன்முறையை தூண்டும் படமாக அமைந்துள்ளதால் இப்படத்திற்கு “ஏ” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: சினிமால மட்டும் அந்த தொழில் இல்ல, உடல் தேவைக்காக குடும்ப பெண்களும் இத செய்றாங்க.. சர்ச்சையை கிளப்பிய இரவின் நிழல் நடிகை

மன்மத லீலை: இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முருகானந்தம் தயாரிப்பில் வெளியான ஒரு நகைச்சுவை திரைப்படம். இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் , ரியா சுமன், ஜெய பிரகாஷ் என முக்கிய நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

2010 மற்றும் 2020 என இரு காலகட்டங்களாக இப்படம் உருவாகியுள்ளது.இதில் முகநூல் மூலம் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே அறிமுகம் ஆகி பின் எல்லை மீறுகின்றனர். தவறான உறவுமுறை மூலம் சிக்கி பின் அதிலிருந்து எவ்வாறு தப்பிக்கின்றனர் என்பதை படத்தின் கதையாக அமைந்துள்ளது. சமூக சீர்கேடு படமாக அமைந்துள்ளதால் இப்படத்திற்கு “ஏ” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பட்டாம்பூச்சி: இயக்குனர் பத்ரி இயக்கத்தில் வெளியான ஒரு திரில்லர் படமாகும். இதில் சுந்தர் சி, ஜெய், ஹனி, ரோஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 1989 இல் நடக்கும் பீரியட் ஃபிலிம் கதையாக இந்த படம் அமைந்துள்ளது. தூக்கு தண்டனை கைதி ஆன சுதாகர் தண்டனையிலிருந்து தப்பிக்க தான் பட்டாம்பூச்சி என்னும் சைக்கோ கொலைகாரன் என்ற ட்விஸ்ட்டை கொடுத்துள்ளான்.

அதன் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக குமரன் கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்துள்ளார். அதிலிருந்து பட்டாம்பூச்சி சைக்கோ கொலைகாரன் தப்பித்தாரா இல்லையா என்பதைப் போல் கதைகளம் அமைந்துள்ளது.
பட்டாம்பூச்சி படத்திற்கு தணிக்கை குழு “ஏ” சான்றிதழ் அளித்துள்ளது.

Also Read: நீ ஏண்டி என் காலத்துல இல்லாம போன.. பாரதிராஜாவை ஏங்க வைத்த இரவின் நிழல் நடிகை

இவ்வாறு இந்த ஆண்டு வெளியான இந்த 6 படங்களும் சமூகத்தில் வன்புணர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய படங்களாக அமைந்துள்ளதால் இந்தப் படங்களுக்கு தணிக்கை குழுவானது “ஏ” சான்றிதழ் அளித்துள்ளது. அதிலும் இரவின் நிழல் படத்தின் மூலம் சென்சார் போர்ட்டையே பார்த்திபன் அஜால் குஜால் செய்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்