நம் அனைவருக்குமே நடிகர், நடிகைகள் மட்டும் எப்படி வயதானாலும் ஃபிட்டாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழும். இதற்கு அவர்கள் அன்றாடம் பின்பற்றும் டயட் தான் காரணம் என்று பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால் சில நடிகர், நடிகைகள் எந்த ஒரு டயட்டுமின்றி, ஒருசில நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஃபிட்டாக இருக்கின்றனர் என்பது தெரியுமா?

அதிலும் 41 வயதை எட்டிய பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, இன்று வரை சிக்கென்று இருப்பதற்கு அவரது ஒருசில பழக்கங்கள் தான் காரணம். இக்கட்டுரையில் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க நடிகை ஷில்பா ஷெட்டி பின்பற்றும் சில ஃபிட்னஸ் ரகசியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரகசியம் #1

 

ரகசியம் #1

நடிகை ஷில்பா ஷெட்டி ஃபிட்டாக இருக்க காரணம், அவர் உணவை நன்கு மென்று விழுங்குவாராம். உணவை நன்கு மென்று விழுங்கினால், எச்சில் உணவுடன் நன்கு கலந்து, எளிதில் உடைக்கப்பட்டு, ஜீரண பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். செரிமானம் சீராக நடந்தால், தொப்பை வருவதைத் தடுக்கலாம்.

அதிகம் படித்தவை:  தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர்.

ரகசியம் #2ரகசியம் #2

ஷில்பா ஷெட்டி தனது சமையலில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்வாராம். மேலும் தினமும் காலையில் எழுந்ததும் தேங்காய் எண்ணெயால் வாயை கொப்பளிப்பாராம். இதனால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுமாம்.

ரகசியம் #3

ரகசியம் #3

என்ன தான் வேலை இருந்தாலும், உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று கூறி, அதைத் தவிர்க்கமாட்டாராம். மேலும் இவர் தினமும் உடற்பயிற்சி செய்யமாட்டாராம், வாரத்திற்கு 3 நாட்கள், அதுவும் 45-50 நிமிடம் உடற்பயிற்சி செய்வாராம். முக்கியமாக உடற்பயிற்சி செய்யும் போது சுவாசிப்பதில் அதிக கவனம் செலுத்துவாராம். இதனால் மனம், உடல் மற்றும் ஆத்மா போன்றவை சிறப்பாக இருக்குமாம்.

அதிகம் படித்தவை:  குயின் பட நாயகி வெளியிட்ட ஒரு புகைப்படம்- ரசிகர்களின் வாழ்த்து மழையில் நடிகை

ரகசியம் #4

ரகசியம் #4

நடிகை ஷில்பா ஷெட்டி சோடா பானங்களைத் தவிர்த்து 10 வருடங்கள் ஆகிறதாம். மேலும் இவர் லஸ்ஸி, மோர் போன்றவற்றைத் தான் அதிகம் குடிப்பாராம். எனவே செயற்கை சுவையூட்டிகள் கலக்கப்பட்ட டயட் சோடாக்கள் பக்கமே போகாதீர்கள்.

ரகசியம் #5

ரகசியம் #5

ஷில்பா ஷெட்டி தனது காலை உணவை 7.30 மணிக்கே முடித்துவிடுவாராம். இதனால் ஒரு நாளைக்கு வேண்டிய ஆற்றல் அதிகளவு கிடைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதும் குறையுமாம். அதேப் போல் இரவு உணவை 7.30-8 மணிக்குள் முடித்துவிடுவாராம்.