Sports_cinemapettai

காயத்தால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காமல் இருக்கும் குஜராத் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ பெங்களூர் அணியுடனான இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பிக்பாஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடும்போது பிராவோவின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

அதன்பிறகு கிரிக்கெட்டில் இடம்பெறாமல் இருந்தார். தற்போது பிராவோ மீண்டும்  பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிராவோ அதில் ‘‘முதல் பயிற்சி சிறப்பாக அமைந்துள்ளது, விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதனால் பெங்களூர் அணியுடனான இன்றைய லீக் போட்டியில் பிராவோ இடம்பெறலாம் என்று தெரிகிறது.