ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. தயாரிப்பாளார் எடுத்த அந்த துணிச்சல்

தமிழ் சினிமாவில் தற்போது வெள்ளிக்கிழமை என்றாலே 5 படங்களுக்கும் மேல் ரிலீஸ் செய்து வருகின்றனர். இதனால் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி இரண்டு படங்களை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்திராத ஒரு மிக பெரிய நிகழ்வு ஆகும். சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் உருவான ‘அடுத்த சாட்டை’,  ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன் என்ற திரைப்படம். தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் உரிமத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

இதனால் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில்  வெளிவர உள்ளது என்பது சினிமா வட்டாரங்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.  ஒரே கம்பெனி இரண்டு படங்களை ஒரே நேரத்தில் வெளியிடுவதால் இதை போட்டியாக கருத முடியாது.

Leave a Comment