Tamil Cinema News | சினிமா செய்திகள்
மார்க்கெட் இல்லாத வாரிசு நடிகரை தத்தெடுத்த சன் பிக்சர்ஸ்.. சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவருக்கு இந்த நிலைமையா?
தமிழ் சினிமா தற்போது பெரிதும் நம்பியுள்ள தயாரிப்பு நிறுவனம் என்றால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான். முன்னணி நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் வரை தொடர்ந்து தயாரித்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் படம் தயாரிக்கும் முறையே வேறு. மார்க்கெட் உள்ள நடிகர்கள் முன்னணி நடிகர்கள் போன்றோரின் படங்களை மட்டும் தான் தயாரிப்பார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.
ஆனால் இந்த முறை அதற்கு மாறாக சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் இருக்கும் வாரிசு நடிகர் ஒருவரின் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் இளைய திலகம் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த விக்ரம் பிரபு, தான் கடைசியாக நடித்த 12 படங்களையும் படு தோல்வி படமாக கொடுத்துள்ளார்.
இதில் சமீபத்தில் வந்த வானம் கொட்டட்டும் படம் மட்டும் சுமாரான வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் விக்ரம் பிரபு மற்றும் கொம்பன் முத்தையா இருவரும் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.
இந்த படத்தை தியேட்டரில் வெளியிடப் போவதில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு பதிலாக அமேசான், நெட்ப்ளிக்ஸ் போல தன்னுடைய சன் நெக்ஸ்ட் நிறுவனத்திற்காக அந்த படத்தை உருவாக்க இருக்கிறார்களாம்.
இந்த படம் வருகிற பொங்கல் வெளியீடாக சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாக உள்ளதாம்.
