தமிழ் படங்களில் எப்பொழுதும் போட்டிகள் இருந்துகொண்டே தான் இருக்கும் ஏன் என்றால் சிலருக்கு ரஜினி பிடிக்கும், சிலருக்கு கமல் பிடிக்கும்  இதனால் அவரவர் ரசனைக்கேற்ற நடிகர்களை ரசிகர்கள் தேர்ந்தெடுப்பதே காரணம்.

இதே போல்தான் நடிகர்களின் படங்களுக்கும், முன்னணி நடிகர்கள் என்றால் ரசிகர்கள் போட்டி போட்டுகொள்வார்கள், ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த நடிகரின் புகைப்படங்கள், டீசர், ட்ரைலர்களை சமூகவளைதலங்களில் பரப்புவதை  ரசிகர்கள் ஒரு ஜாலியாக செய்கிறார்கள்.    

இதலாம் இருக்கட்டும் இப்பொழுது தமிழ் படங்களின் முதல் மூன்று இடத்தை பிடித்த டீசர் எவை எவை என்று பார்ப்போமா.

தமிழ்ப் படங்களின் டீஸர்களைப் பொறுத்தவரை இதுவரை ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தின் டீஸர்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது கபாலி படத்தின் டீஸரை இதுவரை 34 மில்லியன்களுக்கு மேலான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

கபாலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது என்ன படம் தெரியுமா? விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’தான். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி யு ட்யூபில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் டீஸர் தற்போது இரண்டரை கோடிக்கும் மேலான ஹிட்ஸைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்ல, உலகளவில் எந்த டீஸருக்கும் கிடைக்காத அளவுக்கு 9 லட்சத்திற்கும் அதிகமான ‘லைக்ஸை’யும் பெற்றிருக்கிறது. மெர்சல் படத்தின் டீஸரை இதுவரை 25 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளதால் அப்படம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

மெர்சல் படத்தின் டீசர் குறைந்த நாட்களில் 25மில்லியன் பார்வையாளரை கடந்துள்ளது  விரைவில் கபாலி படத்தின் டீசர் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ajith vivegam

அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் டீஸர் 22 மில்லியன் ஹிட்ஸ் உடன் 3 ஆவது இடத்திலிருக்கிறது. வேதாளம் சாதனையை தெறியில் முறியடித்தனர் விஜய் ரசிகர்கள். தெறி சாதனையை விவேகம் முறியடிக்க, இப்போது விவேகம் சாதனையை பின்னுக்குத் தள்ளிவிட்டிருக்கிறது விஜய்யின் ‘மெர்சல்’.

தல அஜித்தின் அடுத்த படம் விஜய்யின் மெர்சல் டீசர் சாதனையை முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.