Sports | விளையாட்டு
மொத்தமும் முடிந்தது, தோனியால் மட்டும் என்ன செய்திட முடியும்.. கைவிரித்த கோச் பிளெமிங்
நேற்று மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில் முதல் பவர் பிளே பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அப்போதே போட்டி முடிந்துவிட்டது என்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக செயல்படவில்லை, பவுலர்கள் போராடுவதற்கு போதிய இலக்கு இல்லை அதனால் விக்கெட் இழப்பின்றி எளிதாக வென்றது மும்பை அணி.
புதுப்புது யுக்திகளை கையாண்டும் பலனளிக்கவில்லை. இந்த சீசன் முழுக்க சிஎஸ்கே ஸ்பின் பவுலிங் மோசமாக சொதப்பியது. இதனால் தாஹிர் அணிக்குள் வர வேண்டிய கட்டாயம் இருந்தது.

csk dhoni fleming
சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் பிளமிங் நேற்று பேட்டி அளித்தார்.
அதில், நேற்று சிஎஸ்கே அணிக்குள் இம்ரான் தாஹிரை கொண்டு வர வேண்டிய தேவை இருந்தது. இதன் காரணமாகவே நேற்று அணிக்குள் வாட்சன் நீக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப சாவ்லா நீக்கப்பட்டு ரூத்துராஜ் அணிக்குள் வந்தார். அதனால்தான் அவர் ஓப்பனிங் செய்தார் இருந்தாலும் பேட்டிங் வரிசை சிறப்பாக செயல்படவில்லை.
ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டோம்
இது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
