பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் ஓபன் நாமினேஷன்.. இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தான்!

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனைவருக்கும் மிகவும் பிடித்த போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாவது வாரத்திலேயே ஓபன் நாமினேஷன் நடைபெறுவது பலருக்கும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் வெளியேற்ற விரும்பும் நபர்களின் முகத்தில் கருப்பு நிற பென்னால் பெருக்கல் மார்க் போடுகின்றனர்.

அதில் நிறைய ஓட்டு ஜூலிக்கு கிடைக்கிறது. பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, வனிதா உள்ளிட்டோர் ஜூலியை நாமினேட் செய்த அவர் சேப் கேம் விளையாடுவதாக குறிப்பிடுகின்றனர். ஜூலிக்கு அடுத்து சுஜாவை, தாமரை, ஷாரிக், அபிராமி ஆகியோர் நாமினேட் செய்கின்றனர்.

சுஜா வீட்டில் கொஞ்சம் ஓவரா நடந்து கொள்வதாக பலரிடம் இருந்து கமெண்ட் வருகிறது. அதற்கடுத்து நிருப். அபிநய்க்கு ஓட்டு போட்டு அவரை நாமினேட் செய்கிறார். நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் ஹவுஸ் மேட்ஸ் கூறிய அந்த கருத்துக்களை அவர்கள் மூவரும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொள்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து வனிதா மற்றும் சுருதி இருவரும் இந்த ஓபன் நாமினேஷனில் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் வனிதா செய்வது பலருக்கும் பிடிக்கவில்லை. அதேபோல் சுருதி இன்னும் விளையாட்டை ஆரம்பிக்கவே இல்லை. மேலும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனைவரும் தங்களது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆனால் அபிநய், அனிதா போன்றவர்கள் மட்டும் இன்னும் ஒரு முகமூடியை அணிந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. அதிலும் அனிதா நேற்று சுரேஷ் தாத்தா வெளியேறிய பின்பு நீதி வென்றது என்று எழுதியது பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த வாரம் அனிதா நாமினேட் ஆகும் பட்சத்தில் அவர் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.