மும்பையில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் பெஹ்ரிதார் பியா கி. இந்த சீரியலை சோனி நிறுவனம் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. இந்த சீரியலில்தான் அந்த கொடுமை.

அப்படி என்ன சர்ச்சசைக்குரிய கதையென்றால் 9 வயது சிறுவனுக்கும், 18 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை அந்த சீரியலில் காட்டி வந்தனர்.

9 வயது அஃபான் கான் கணவராகவும், தேஜஸ் பிரகாஷ் 18 வயது மனைவியாகவும் நடித்தனர். இதில் இளம்பெண்ணை சிறுவன் சைட் அடித்துக்கொண்டே பின்தொடர்வது, இளம்பெண்ணுக்கும் சிறுவனுக்கும் முதலிரவு நடப்பது போன்ற காட்சிகள் வந்திருக்கின்றன. அதுவும் முதலிரவில் இருவரும் அறைக்குள் சென்று கதவை தாழிடுவது போன்ற காட்சிகள்.

இதனை கண்டு வெகுண்ட பொது மக்கள் இந்த சீரியலை நிறுத்தக் கோரி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த புகார்கள் எழுந்ததை அடுத்து சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை இரவு 8. 30 மணியில் இருந்து 10.30 மணிக்கு மாற்றினார்கள். அப்படியும் எதிர்ப்பு வலுத்தது. தொடர்ந்து எதிர்ப்பு வலுத்ததால் சோனி சேனல் இந்த சீரியலை நிறுத்திவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பசங்களுக்கு இருக்குற பிரச்சனை போதாதா? இதெல்லாம் வேற கிளப்பிவிட்டு அவனை தப்பு செய்ய தூண்டனுமா?