வைரலாகுது மிர்ச்சி சிவா நடிக்கும் “சுமோ” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர். அட சுமோ மல்யுத்த வீரருடன் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கே !

மிர்ச்சி சிவா நடிப்பில் தமிழ் படம் 2 வெளியானது. அடுத்ததாக வெங்கட் பிரபுவின் பார்ட்டி ரிலீஸ் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் இன்று சிவா நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சுமோ

sumo

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். பிப்ரவரி 14. ஆயிரம் விளக்கு படங்களை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். நிவாஸ் பிரசன்னா இசை. ராஜீவ் மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இவர்களுடன் சுமோ மல்யுத்த வீரரான யோசினோரி தாஷிரோ (Yoshinori Tashiro) நடிக்கிறார் .

mirchi shiva sumo

காமெடி நிறைய, கூடவே சென்ட்டிமெண்டும் கலந்த இப்படத்தின் திரைக்கதை அமைப்பது மற்றும் வசனமும் நம் அகில அகில உலக சூப்பர் ஸ்டாரான சிவா எழுதியுள்ளதாக சொல்கிறார்கள்.

Leave a Comment