Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆளே அடையாளம் தெரியாத கெட் அப்பில் டைட்டானிக் ஜாக்.. வைரலாகுது புதிய பட பர்ஸ்ட் லுக்
லியானர்டோ டி காப்ரியா ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகர். 46 வயதே ஆயினும் இதுவரை இவர் நடித்த கதாபாத்திரங்கள் எண்ணில் அடங்காதவை. எனினும் டைட்டானிக் வாயிலாக இந்திய ரசிகர்களை நிலம் கவர்ந்தவர். நம்மில் பலருக்கு இன்றும் இவர் ஜாக் என்றால் தான் தெரியும்.
இவர் பிரபல இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்ஸியுடன் இணைந்துள்ள படம் தான் Killers of the Flower Moon. இப்படத்தின் முதல் லுக் போட்டோவை ஆப்பிள் நிறுவனம் பகிர, இணையத்தில் வைரலானது.
போட்டோவில் நாயகன் லியானர்டோ டி காப்ரியா (எர்னஸ்ட் புக்கெட்) மற்றும் நாயகி அவர் மனைவியாக லில்லி கால்ட்ஸ்டோன் (மொல்லி) இருக்கும் இந்த புகைப்படமே அது.

Leonardo DiCaprio and Lily Gladstone “Killers of the Flower Moon.”
டேவிட் கிராம் எழுதிய நாவலின் அடிப்படையில் ரெடியாகும் படம். 1920 களில் ஒக்லஹாமா நகரில் நடந்த படுகொலையை மையப்படுத்தும் கதை. ராபர்ட் டி நைரோ, ஜானே காலின்ஸ், காரா ஜேட் மேயெர்ஸ், ஜில்லியன் டியான் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கொரானாவின் பரவல் காரணமாக சுமார் ஒரு வருடம் தள்ளி போன ஷூட்டிங் ஏப்ரல் 19 தொடங்கியது. ரிலீஸ் தேதி எதுவும் முடிவாகவில்லை.
