தமிழ் சினிமாவுக்கு ஒரு ஃபார்முலா உண்டு. அதாவது ஒரு ஜானரில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அடுத்த சில மாதங்களுக்குள் அதே ஜானரில் குறைந்தது 100 படங்களாவது வெளியாகிவிடும். அவற்றில் ஒன்று இரண்டுதான் வெற்றி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு ட்ரெண்ட் உருவாகி விட்டால் அதையே திரும்பத் திரும்பச் செய்வதே தமிழ் சினிமாவுக்கு வேலையாக போய்விட்டது. அப்படி கடந்த சில வருடங்களாக இல்லாமல் திடீரென தமிழ் சினிமாவில் ட்ரெண்டான ஜானர்தான் திகில்.
பேய் படங்களுக்கு நல்ல மவுசு அதிகரித்ததை தொடர்ந்து தொடர்ந்து அதே மாதிரி ஏகப்பட்ட படங்கள் வந்துவிட்டன. அதிலும் குறிப்பாக அரண்மனை, காஞ்சனா படங்கள் பேய் படங்களில் காமெடி காட்சிகளை வைத்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த விட்டனர்.
இதனாலேயே பலரும் காமெடி கலந்த பேய் படங்களை தொடர்ந்து எடுத்து வந்தனர். ஆனால் 80, 90 கால கட்டங்களில் அதிகமாக தமிழ்சினிமாவில் பேய் படங்களை பார்க்க முடியவில்லை. அப்போது மாஸ் படங்கள் வெற்றி பெற்று வந்ததாக கூறுகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு திகில் படம் வெற்றி பெற்றது என்றால் அது ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா நடித்த யார் நீ என்ற படம்தானாம். 1966 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படம் வெற்றி பெற்றாலும் இதே போன்ற படங்கள் அதிகமாக வெளிவராமல் வித்தியாச வித்தியாசமான கதைகள் அந்த காலகட்டங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.