Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்த முதல் நடிகர் இவர்தான்.. போற்றிப் புகழ்ந்த தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை பல நடிகர்கள் தங்களுடைய முதல் பட வாய்ப்புக்காக குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு நடிப்பதும் பின்னால் வளர்ந்ததும் இஷ்டத்திற்கு சம்பளம் கேட்பதும் நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
பெரும்பாலும் சினிமா நடிகர்கள் தங்களால் நஷ்டமடையும் தயாரிப்பாளர்களை கண்டுகொள்வதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டும் தங்களால் நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுத்து அவர்களை காப்பாற்றி விடுவார்கள். அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய் போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம்.
தன்னுடைய நூறாவது படம் தோல்வி அடைந்ததற்காக அதே கம்பெனிக்கு அடுத்த பட வாய்ப்பை ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த நடிகர் இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.
அவர் வேறு யாரும் இல்லை. நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஸ்ரீ ராகவேந்திரா படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த நிலையில் அடுத்ததாக அதே கவிதாலயா கம்பெனிக்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் வேலைக்காரன் எனும் படத்தை நடித்து கொடுத்தாராம்.
அதுமட்டுமில்லாமல் பாபா படம் நஷ்டம் அடைந்த போதும் தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு பணம் கொடுத்து செட்டில் செய்ததாக பிரபல தயாரிப்பாளரும் திரையரங்கு சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்.
