fbpx
Connect with us

நேற்று வெளிவந்த படங்களின் நிலவரம் என்ன? யாருக்கு முதலிடம் ?

நேற்று வெளிவந்த படங்களின் நிலவரம் என்ன? யாருக்கு முதலிடம் ?

kakakapoமார்ச் 11, வெள்ளிக் கிழமை  நேற்று 6 திரைப்படங்கள் வெளிவந்தன. “காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம், நட்பதிகாரம் 79, கோடை மழை, என்ன பிடிச்சிருக்கா, அவியல்” ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் காதலும் கடந்து போகும், மாப்ள சிங்கம் இரண்டு படங்களுக்குத்தான் கொஞ்சம் அதிகமான தியேட்டர்கள் கிடைத்தன. மற்ற படங்கள் தட்டுத் தடுமாறித்தான் தியேட்டர்களைக் கைப்பற்றின. இவற்றில் அவியல் திரைப்படம் குறும்படங்களின் கூட்டுக் குவியலாகும். மல்டிபிளக்ஸ்களில் கூட இந்த அவியலை ரசிப்பார்களா என்பது சந்தேகம்தான். இன்னும் நமது ரசிகர்கள் மாற்று சினிமாவுக்கு மாறவில்லை என்பதே உண்மை.

நேற்று வெளியான படங்களில் காதலும் கடந்து போகும் படம்தான் நேற்றைய நிலவரப்படி வசூலில் முன்னணியில் இருந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஓரளவிற்கு படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. படம் மெதுவாக நகர்வது மட்டுமே இந்தப் படத்தில் குறையாகத் தெரிவதாக பெரும்பாலான ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

மாப்ள சிங்கம் படத்தில் கதை என்றெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனாலும், கிளாமரான அஞ்சலியை ரசிப்பதற்கு மட்டுமே ரசிகர்கள் வருகிறார்களாம். விமல் நடித்து இதற்கு முன் வந்த படங்கள் தோல்விப் படங்களின் வரிசையில்தான் இருக்கின்றன. அதில் இந்தப் படமும் சேராமல் தப்பிக்குமா என்பதுதான் கேள்வி.

நட்பதிகாரம் 79, கோடை மழை, என்ன பிடிச்சிருக்கா ஆகிய படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் ஓடி வசூலித்தால் போதும் என்பதையும் மீறி கியூப் பணமாவது கிடைக்குமா என்றுதான் தியேட்டர்காரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top