பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது கார்த்தி நடிப்பில் ‘காற்று வெளியிடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை அபிராமிபுரத்தில் உள்ள மணிரத்னம் அலுவலகத்தில் இன்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் மணிரத்னம் அலுவலகத்தில் இருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் தீயில் சேதமடைந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.