கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடத்தில் இருந்த ஆவணங்கள் 3 கம்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனத்தில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இந்த தீ விபத்தால் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் கட்டிடத்தில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் 3 கம்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானதாக அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.