அஸ்வின் தலைமயில் கிங்ஸ் பஞ்சாப் அணியும், கம்பிர் தலைமையில் டெல்லி அணியும் இன்று மாலை 4 மணி போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் வீரர் பின்ச் மற்றும், மாக்ஸ்வெல் விளையாட மாறூம் என்று முன்பே அறிவித்திருந்தனர்.

ஏப்ரல் 7

நேற்று துவக்க விழாவுடன் துவங்கியது ஐபில். முதல் போட்டியில் சென்னை அணி மும்பையை வீழ்த்தியது. இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் டெல்லி பஞ்சாப் மோதுகின்றன.

Finch – Amy

நேற்று, அதாவது ஏப்ரல் 7 ஆரோன் பின்ச், தன் பார்ட்னர் ஏமி கிரிஃபித்சை விக்டோரியாவில் திருமணம் செய்தார். மாப்பிளை தோழனாக உடன் இருந்தவர் கிளென் மாக்ஸ்வெல்.

#grinchwedding

A post shared by Glenn Maxwell (@gmaxi_32) on

ஏப்ரல் 18 தான் ஐபில் தொடங்கும் என்ற பழைய அட்டவணையை வைத்து, திருமணத்தை ஏப்ரல் 7 பிளான் செய்துள்ளார் பின்ச். எனினும் பிசிசிஐ ஒரு வாரம் முன்பே ஐபில் போட்டிகளை துவங்கிவிட்டது. எனினும் இனி வரும் போட்டிகளில் இவர்கள் கலந்துகொள்வார்கள்.