Connect with us
Cinemapettai

Cinemapettai

கடைசியில் இந்த நிலைமைக்கு ஆளான பாகுபலி நடிகை!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடைசியில் இந்த நிலைமைக்கு ஆளான பாகுபலி நடிகை!

பாகுபலி படத்திற்கு பிறகு அதில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருக்கும் மார்கெட் மிகவும் பலமாக இருக்கும் என்றும் அடுத்தடுத்து அவர்கள் நடித்த படங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.Baahubali

ஆனால் அதற்கு நேர்மாறாக ராணா தவிர்த்து மீதமுள்ளோர்  நடித்த படங்கள் எதுவும் இன்றளவும் வெளிவரவில்லை. இந்நிலையில் அப்படத்தின் மூலம் புகழ் பெற்ற கதாநாயகி தமன்னா அவர்கள் தற்போது ஒரு பாடலுக்கு ஐட்டம் ஆட்டம் ஆடுகிறார்.

ஆம் ஜூனியர் என்.டி.ஆர். நடித்து வெளிவரவிருக்கும் ஜெய் லவ குசா என்னும் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் தமன்னா.

இது பற்றி அவரிடம் கேட்டபோது “இதில் தவறேதும் இல்லை. ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் எனக்கும் ஒரு இடம் இருப்பதே நான் பெருமையாக கருதுகிறேன். ஒரே ஒரு காட்சியாக இருந்தாலும் அவர் படத்தில் நான் இருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியே. ஒரு பாடலுக்கு ஆடுவதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை, அது குறித்து நான் வருந்தவும் இல்லை. இதனால் என்னுடைய மார்கெட் குறைத்ததாக கருத வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்:

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top