முகிலன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் மக்களுக்காக போராடிய மக்கள் விரோத சக்தி என்று தவறாக சித்தரித்து முகிலன் அடையாளமே தெரியாமல் மாறிப்போன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய மக்களை 8 பேர் கொல்லப்பட்டனர், அதற்கான எதிர்ப்பு மற்றும் ஆதாரங்கள்எ வீடியோவை 15-ஆம் நாள் வெளியிட்டார். இதனால் பல நெருக்கடிகளை சந்தித்து மறுநாள் சென்னையில் ரயில் நிலையத்தில் காணாமல் போய்விட்டார்.
பின்பு எழும்பூர் போலீசாரிடம் அவர் தரப்பு வழக்கறிஞர் ஆட்கொணர்வு மனுவை அளித்து மீட்டுத்தருமாறு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். தற்போது ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது அவர் காணாமல் போய் நேற்றைய தினம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்பு இந்த செய்தி தமிழக சிபிசிஐடிக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களை வேலூர் மாவட்டத்தில் வந்து ஒப்படைத்துள்ளனர். தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் கைது செய்த போதும் தனது போராட்டத்தை நிறுத்தாமல் முகிலன் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், அணுஉலைகளை அமைப்பதற்கு மத்திய மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தபடியே கதறிக் கொண்டு போகும் வீடியோக்களை பதற செய்துள்ளது.
மக்களுக்காக போராடினால் சமூக விரோதி என்று முத்திரை குத்தி விட்டு இந்த அரசு வளரும் தலைமுறைகளை அடியோடு அழிப்பதற்கான வேலைகளை செய்து வருவதை கண்டால் பெரும் அதிர்ச்சியாகிறது.
எனினும் தமிழக மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான சந்தோசம் என்னவென்றால் முகிலன் தற்போது உயிரோடு நலமாக இருக்கிறார். முகிலனுக்கு ஆதரவு சமூக வலைத்தளங்களில் பெருகி வருகிறது.

