இந்தியா பெண்கள் மீது மிகுந்த மதிப்பும், பாசம் அதிகம் கொண்ட நாடு. அதனால் தான் என்னவே நாட்டை பாரத மாதா என்றும், இங்குள்ள ஆறுகள், ஊர்கள், சாமிகள் என அனைத்தும் பெண்களின் பெயரில் இருக்கின்றன. இந்தியாவில் தான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் பெண்கள் மதிக்கப்பட்டார்கள். சமீப காலமாக பெண்கள் போகப் பொருளாக பார்க்கப்படுவதாக தமிழகத்தை சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கோவை டி.சி.பி.லட்சுமி ஐ.பி.எஸ் அதிகாரி கூறுகையில், பெண்ணின் உரிமைக்கு போராடிய பெரியார் பிறந்த மண் இது. தற்போது பெண் போகப் பொருளாகவும் திருமணத்திற்கு நகை வாங்க பயன்படுத்தும் பொருளாகவே பலர் கருதுகிறார்கள். இதற்கு முக்கிய காரணங்கள் சினிமா என்று தான் கூற வேண்டும், இளைஞர் மத்தியில் பெண்கள் தொடர்பாக அவதூறுகளை சினிமா மூலமாக பரப்புகின்றனர். பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலும் தாய், மனைவி,மகள், தங்கை, அக்கா, உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து எழுத வேண்டும்,அவர்கள் தாங்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.

கோவை எஸ்.பி ரம்யா பாரதி கூறுகையில் ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் 12 பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று அவர்கள் புகார் அளிக்கின்றனர். இதற்கு சினிமாவின் பங்கு தான் அதிகம். இழிவான பாடல்கள், வசனங்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்றார்.

அதிகம் படித்தவை:  எனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்

டி.எஸ்.பி திஷா மிட்டல் ஐ.பி.எஸ் அதிகாரி கூறுகையில் பொழுதுபோக்கு என்பது பொதுவாக நம்வாழ்வில் அழுத்தத்தை குறைக்க உதவுவது. ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பாடல் வரிகள், உரையாடல்கள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே தற்போது அமைகிறது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சமீப காலமாக படங்களில் வசனம், உச்சரிப்பு ஆண்கள் இடையே தவறாகவும், பெண்களுக்கு எதிரான குற்றத்தை செய்ய ஊக்குவிக்கிறது என்றார்.

இவர்கள் மூன்று பேரும் நடிகர் தனுஷ் ஒரு படத்தில் புடிடா அவளா, வெட்டுடா அவளா என்ற வரியும், சிம்புவின் ஒரு பாடலில் எவண்டி உன்னை பெத்தான், கையில கிடைச்சா செத்தான்,

ஜி.வி பிரகாஷ் பாடல் வரியில் பெண்களை பார்த்து இனி எனக்கு பிட் படம் என வரும்,

சிவகார்த்தியேன் படத்தில் ரொமான்ஸ் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தி வருவராக நேரடியாக தெரிவித்தனர். ஆகவே இனி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், வசனகர்த்தா ஆகியோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டுமென 3 பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Three women IPS officers appeal to the film fraternity to be m…

Three women IPS officers appeal to the film fraternity to be more responsible to society. Cinema leaves an everlasting impression in the minds of youth. SO RESPECT WOMEN, IT'S VERY IMPORTANT, they say.. Watch this space…#RESPECTWOMEN#Coimbatore #CovaiPost #People #TamilCinema #Media #Youth #Actor #Responsibility #Woman #Violence #Society #Perspective #Impact #Police #Awareness #Respect #Cinema #Film Tamil Nadu Police Force Government of India #Government #Rights #TamilNadu #India Dhanush SivaKarthikeyan Silambarasan Abishek Raaja

Posted by Covai Post on Tuesday, May 2, 2017