22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12 அம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதுகுறித்த தகவல்களை பார்க்கலாம்.
22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழா பிவிஆர் சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ் சினிமா போட்டிப் பிரிவில் 25 படங்கள், உலக சினிமா பிரிவில் 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவ்விரண்டு பிரிவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் வரும் நிறைவு விழாவில் தெரிவிக்கப்படவுள்ளது.
சென்னை பிலிம் ஃபெஸ்டிவலில், மொத்தம் 123 தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. சினிமா கலைஞர்கள், ஆர்வலர்கள், மாணவர்களுக்கான நல்வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
மொத்தம் 8 நாள்கள் நடக்கும் இவ்விழா ராயப்பேட்டை சத்யம் & INFOX City Centre 2 ல் நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் பாஸ் வாங்க வேண்டும்.
ஒரே பாஸ் 8 நாள் பயன்படுத்தலாம் என தெரிகிறது. இருப்பினும் அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம். எனினும் ஒருவருக்கு ஒரு பாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.