Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியான பிலிம்பேர் விருதுக்களுக்கான நாமினி பட்டியல்…
பிலிம்பேர் விருதுகளுக்கான நாமினி பட்டியலில் கடந்த வருடம் வெற்றி பெற்ற பல தமிழ் படங்களும், கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர்.
பிரபல பிலிம்பேர் நாளிதழ், ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிலிம்பேர் விருதுகள் அனைவர் மத்தியிலும் வெகு பிரபலமாக இருந்து வருகிறது. இதே, பிலிம்பேர் நிறுவனத்தால் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 1953ஆவது ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு 1954ஆம் ஆண்டு முதலாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இவ்விருது 1967ஆம் ஆண்டு முதல் மலையாளம், மற்றும் 1970ஆம் ஆண்டு முதல் கன்னட மொழித் திரைப்படங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி திரைப்படத்துறைக்கும் தனித்தனியான விருதுகளும், அனைத்திற்கும் சேர்த்து பொதுவான விருதுகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த வருடம் வெற்றி பெற்ற முக்கிய படங்களுக்கான பிலிம்பேர் விருதுகளின் நாமினிகள் வெளியாகி இருக்கிறது. சிறந்த படங்களுக்கான பட்டியலில், அருவி, தரமணி, அறம், விக்ரம் வேதா, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
சிறந்த இயக்குனர்களுக்கான பட்டியலில், அருண் பிரபு புருஷோத்தமன்(அருவி), கோபி நைனார் (அறம்), அட்லி (மெர்சல்), தனுஷ் (பா.பாண்டி), எச்.வினோத் (தீரன்), புஷ்கர் காயத்ரி( விக்ரம் வேதா) உள்ளன.
சிறந்த நடிகருக்கான நாமினியில், விஜய் (மெர்சல்), ராஜ்கிரண் (பா.பாண்டி), கார்த்தி (தீரன்), மாதவன் (விக்ரம் வேதா) ஆகியோர் உள்ளன. சிறந்த நடிகைக்கான நாமினிகளில், அதிதி பாலன் (அருவி), ஜோதிகா (மகளிர் மட்டும்), நயன்தாரா(அறம்), ஆண்ட்ரியா(தரமணி), அமலா பால்(திருட்டு பயலே2), ரேவதி(பா.பாண்டி) ஆகிய நடிகர்களும், நாயகிகளும் இடம்பெற்றுள்ளனர்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பட்டியலில், ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான் மற்றும் அனிருத் இருக்கிறார்கள். விரைவில், இவர்கள் யாருக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருப்போம்.
