Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே.. என கொளுத்திப் போட்டதால் கொழுந்து விட்டு எரியும் பிக் பாஸ் வீடு!
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
எனவே பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற ‘ராஜா குடும்பமும் அரக்க குடும்பமும்’ என்ற டாக்கிங் மூலம் மொட்ட பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி கொளுத்திப் போட்ட ஒரு விஷயம் தற்போது பிக்பாஸ் வீடே கொழுந்துவிட்டு எறியும் அளவுக்கு மாறிடுச்சு.
ஏனென்றால் இந்த சீசன் தொடங்கிய நாளிலிருந்து வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம எல்லாரையும் பாரபட்சம் பார்க்காமல் வம்புக்கு இழுக்கும் மொட்ட பாஸ், தற்போது சனம் ஷெட்டியை குறி வைத்துள்ளதாக தெரிகிறது.
ஏனென்றால் இந்தக் டாஸ்கிங் போது சம்யுக்தாவிடம் ‘பாம்பை பக்கத்துல படுக்க வெச்சு இருக்கியே’ என்று சனம் ஷெட்டியை வம்புக்கு இழுத்துள்ளார் மொட்ட பாஸ்.
அதுமட்டுமில்லாமல் அனிதாவையும் ‘கிறுக்கி அப்படி தான் பேசும்’ என்று மூஞ்சிக்கு நேரா பேசி சண்டையை ஸ்டார்ட் பண்ணிட்டாரு நம்ம மொட்டை பாஸ்.
இப்படி அவர் கன்னாபின்னான்னு அப்பப்ப கொளுத்தி போடுவதால், அப்பப்ப முட்டிக்கிற சண்டைதான் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

bigg-boss-promo
