பாகுபலியை பொறுத்தவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் படம் ரிலீஸ் ஆகி வசூல் சாதனையை அள்ளிவிட்டது. ஆனால் இப்போதோ புதிய சர்ச்சையாக மாறியிருக்கிறது ஸ்ரீதேவியின் சமீபத்திய பேட்டி. பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு முன்பு இவர் தான் நடிக்க இருந்தாக தகவல்கள் வெளியானது.

ஸ்ரீதேவி அதிக சம்பளம் மற்றும் பல டிமாண்ட்களை வைத்தது காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவி தன் சொந்த விசயத்தால் பாகுபலியில் நடிக்க முடியாமல் போனது என கூறினார்.

தற்போது அவர் ராஜமௌலியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். அவர் எப்படி என்னை பற்றி தவறாக பேசலாம் என்பது போல கூறியிருக்கிறார். மேலும் சொல்லாததையும் சொன்னதாக கூறிய ஸ்ரீதேவியின் பேட்டி தெலுங்கு திரையுலகில் புகைச்சலை உண்டாக்கியுள்ளது.