கத்ரீனாவின் பட வாய்ப்புகள் அனைத்தையும் தீபிகா தட்டிப்பறிப்பதால், அவருடைய காதலை தட்டிப்பறிக்கும் முயற்சியில் கத்ரீனா ஈடுபட்டு வருகிறார் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்பீர் கபூரை காதலித்தார். ஆனால், தீபிகாவை ரன்பூரின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ரன்பீரின் வாழ்க்கையில் நடிகை கத்ரீனா கைஃப் வந்தார்.

இதில், இருவருக்கும் ஒத்துப் போக, தீபிகாவை கழற்றிவிட்டார் ரன்பீர் கபூர். இதன் காரணமாக தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் இடையில் எப்போது மோதல் தான். இதில், யாராவது ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால் மற்றவர் வரமாட்டார்.

அதிகம் படித்தவை:  நாகினி நாயகி மருத்துவமனையில் அனுமதி!

சமீப காலமாக தீபிகா கத்ரீனா கைஃபின் பட வாய்ப்புகள் மற்றும் விளம்பரப் பட வாய்ப்புகளை தட்டிப்பறித்து வருகிறார். இதனால், ஆத்திரமடைந்த கத்ரீனா, தீபிகாவின் காதலன் ரன்வீர் சிங்குடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஆம் அந்த நடிகரைத்தான் முதலில் விரும்பினேன்: பல வருட உண்மையை உடைத்த குஷ்பு

தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் இணைந்து பத்மாவதி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒன்ராக சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் தீபிகா – ரன்வீர் ஜோடி தற்போது ஷாட் முடிந்த பிறகு யாரிடமும் பேசாமல் அவரவர் கேரவன்களுக்கு சென்றுவிடுகிறார்கள்.