Tamil Cinema News | சினிமா செய்திகள்
பயங்கர அடிதடியில் அஜித், விஜய் ரசிகர்கள்.. போர்களமான தியேட்டர்
அடிதடியில் இறங்கும் அஜித் விஜய் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மோதல் அக்காலம் முதல் இக்காலம் வரை நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர், சிவாஜி என ரசிகர்கள் அப்போது மோதிக்கொண்டனர். அதன்பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன் என ரசிகர்கள் மோதிக் கொண்டனர். தற்போது விஜய், அஜித் என ரசிகர்கள் மோதிக் கொண்டு வருகின்றனர்.
விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் அவர்களது நடிகர்களை பெருமை பேசிக் கொள்வதும் அவர்களைப் புகழ்ந்து தள்ளும் சமூகவலைதளங்களில் வந்தவண்ணம் உள்ளன. இவர்களின் ரசிகர்கள் அவர்களது நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது கட் அவுட் வைப்பது, பட்டாசு வெடிப்பது, என கொண்டாடி வருகின்றனர்.
விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் வந்து 50வது நாள் கொண்டாடினார். தியேட்டரில் அஜித் ரசிகர்களின் விஸ்வாசம் படத்தின் டீசர் கொண்டாட்டம் நடைபெற்றது. பின்பு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு நடைபெற்றது. அடிதடியில் இறங்கிய ரசிகர்கள் பெரும் பிரச்சனை வருவதுபோல் தெரிந்தது. ஆனால் தியேட்டரின் உரிமையாளர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அமைதியாக போகும் வழி கூறியுள்ளார். பின்பு இரு தரப்பினரும் எந்த ஒரு சண்டையும் இல்லாமல் அமைதியாக சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
