fbpx
Connect with us

Cinemapettai

தயாரிப்பாளர்களை நடுத் தெருவில் நிறுத்திய இயக்குனர்கள்.. பிரம்மாண்டதால் அழிந்த படங்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்களை நடுத் தெருவில் நிறுத்திய இயக்குனர்கள்.. பிரம்மாண்டதால் அழிந்த படங்கள்

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களை தயாரித்து பல வெற்றி படங்களை கொடுத்து பிறகு பிரமாண்டம் என்ற வலையில் சிக்கி தன்னுடைய மொத்த சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் கதை நிறைய உண்டு. அப்படி பிரபலமாக இருந்த பல தயாரிப்பு நிறுவனங்கள் எந்தெந்த படங்களின் மூலம் சினிமாவை விட்டு ஒதுங்கினர் என்பதை பார்ப்போம்.

கே.டி. குஞ்சு மோகன்

இணை தயாரிப்பாளராக இருந்து பின்னர் தயாரிப்பாளராக உருவெடுத்தவர் தான் கே.டி. குஞ்சு மோகன். ஜென்டில்மேன், காதலன் போன்ற பெரிய வெற்றி படங்களை கொடுத்த குஞ்சு மோகன் ரட்சகன் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் தொழிலையே ஓரம் கட்டிவிட்டார்.

சிவாஜி புரோடக்சன்ஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் அவருடைய வாரிசான இளைய திலகம் பிரபு இந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் கடைசியாக தயாரித்த டெல்லி நைட் மற்றும் அசல் போன்ற படங்கள் தோல்வியை சந்தித்ததால் நிறுவனத்தை இழுத்து மூடினர். சமீபத்தில் புகழ்பெற்ற சாந்தி தியேட்டரை கூட இடித்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிக் ஆர்ட்ஸ்

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி என்றால் தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அப்பேர்பட்ட சக்கரவர்த்தி, கடைசியாக தயாரித்த காளை, 18 வயசு, வாலு போன்ற படங்கள் தோல்வியை சந்தித்ததால் இனி படம் தயாரிக்க போவதில்லை என முடிவு செய்து விட்டாராம்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன்

ஆஸ்கர் பிலிம்ஸ் கடைசியாக தயாரித்த அனைத்து படங்களுமே படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக திருமணம் எனும் நிக்கா, வல்லினம், வேலாயுதம், பூலோகம் போன்ற படங்களினால் ஏற்பட்ட நஷ்டத்தால் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

24am ஸ்டுடியோஸ்

சிவகார்த்திகேயனை பெரிய அளவில் வளர்த்து விட்டு நம்மளும் பெரிய ஆளாக வேண்டும் என்ற பண போதையில் சொத்தை இழந்தவர் தான் ஆர் டி ராஜா. சிவகார்த்திகேயனை வைத்து இவர் தயாரித்த சீமராஜா, வேலைக்காரன், ரெமோ ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதில் ரெமோ படம் தமிழ்நாட்டில் வசூல் செய்த அளவுக்கு மற்ற மாநிலங்களில் வியாபாரத்தின் அடிப்படையில் பெரிய தோல்வியை சந்தித்து வந்த காசுக்கு வேட்டு வைத்தது.

Continue Reading
To Top