fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உலகையே கலக்கும் ஸ்க்யுட் கேம் சீரிஸ் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்..

India | இந்தியா

உலகையே கலக்கும் ஸ்க்யுட் கேம் சீரிஸ் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்..

SQUID GAME – இணையத்தை கலக்கி வரும் லேட்டஸ்ட் வெப் தொடர். நெட் பிலிக்ஸில் money heist அடைந்த ரீச்சை தாண்டி விட்டது இந்த கொரியன் தொடர். 9 அத்தியாயங்கள், ஹவாங் டவங் ஹ்யுக் இயக்கியுள்ளார். சிறுவயதில் தான் ஆடிய விளையாட்டு தான் இவருக்கு இந்த கதை ரெடி செய்ய இன்ஸபிரேஷன்.

கடனில் உள்ள 456 நபர்கள், குழந்தைகளின் விளையாட்டை விளையாடுகிறார்கள், தோல்வி மரணத்தை கொடுக்கிறது, இறுதியில் யார் பரிசு பணத்தை தட்டி செல்கிறார்கள் என்பதே கதை. டார்க் ஜானர், பிரம்மாண்டம், சஸ்பென்ஸ் என வேற லெவல் தான். செப்டம்பர் 17 வெளியான இத்தொடரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பே இந்த பதிவு.

இரண்டு வருடத்திற்கு முன்பு “ரவுண்ட் 6” என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்ட தொடர். முதல் முறையாக வெளிநாட்டு கம்பெனியுடன் இயக்குனர் இணைந்தார். 2008 இல் எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட், திரைப்படமாக எடுக்க ஆசைபட்டாராம் இயக்குனர். எனினும் இன்று உலகமயமாக்கல் காரணமாக வெப் தொடராக வெளியாகி உள்ளது.

நபர்கள் தங்கியுள்ள டார்மண்ட்ரி அறையில் அடுத்த கேம் என்ன என்ற க்ளூ இருக்கும், உற்று நோக்கினால் நமக்கு அது புரியும். அந்த பொம்மை நிஜத்தில் உள்ளதாம், ஷூட்டிங் சமயத்தில் எடுத்து வந்து, பின் அதனை ஜின்சயான் கவுண்ட்டி வசம் திருப்பி கொடுத்துள்ளனர் இந்த டீம்.

படத்தில் வரும் செல் போன் நம்பர் நிஜத்தில் ஒருவர் பயன்படுத்தியது தானாம். ஒரு நாளில் சுமார் 4000 அழைப்புகள் வந்ததாம் சீரிஸ் ரிலீஸ் ஆன பின்பு. அந்த நம்பரை விலை கொடுத்து வாங்கவும் ஒரு அரசியல்வாதி முன்வந்தாராம்.

6 போட்டிகளில் டல்கோனா கேண்டி இன்று இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது (உருவம் உடையாமல் சாப்பிடுவதும் வேறு வித சுவாரஸ்யம் தான்.)  பாகிஸ்தான் நபராக நடித்தது நம் இந்தியாவை சேர்ந்த 32 வயதான அனுபம் திரிபாதி. கொரியா  படிக்க சென்ற இவர், அங்கே செட்டில் ஆகிவிட்டார்.(விரைவில் பாலிவுட் இவரை நடிக்க கட்டாயம் அழைப்பு விடுக்கும்.) உண்மையிலேயே 456 நபர்களை வைத்து தான் ஷூட்டிங் செய்துள்ளார். போட்டிகளை நாம் பார்ப்பதற்கு நான்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரிஜினலாக செட் அமைத்து போட்டிகள் நடப்பதை படமாக்கியுள்ளனர்.

squid-game

squid-game

போட்டியாளர்களுக்கு பச்சை நிறம், மற்றும் காவலாளிகளுக்கு சிகப்பு உடை, கருப்பு மாஸ்க் கொடித்திருப்பர். காவலாளிகளுக்கு எறும்பு போன்ற தோற்றத்தையும் கொடுத்துள்ளனர். மிருக வடிவ மாஸ்க் CEO போன்றவர்கள் பவர்புல் ஆசாமி என சித்தரிக்க உதவி விட்டது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top