தனது தவறை உணர்ந்த ஜூலி நடுரோட்டில் வைத்து பரணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.பிக்பாஸ் வீட்டில் நடன இயக்குநர் காயத்ரி ரகுராமிற்கு பிடித்தமானவராக இருப்பதற்காக தன்னிடம் உண்மையாக இருந்த ஓவியா மற்றும் பரணியின் உதவிகளை உதாசினப்படுத்தினார் ஜூலி.

இதனையடுத்து ஜூலி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தனக்கு கிடைத்த மரியாதையை ஒட்டுமொத்தமாக இழந்தார்.

இதனையடுத்து பிக்பாஸ் விதிமுறையின்படி இந்த வார எலிமினேஷனுக்கு சக போட்டியாளர்கள் முன்மொழியப்பட்ட ஜூலி பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜூலி நேற்று வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தனது தவறை உணர்ந்த ஜூலி நேற்று நடிகர் பரணியை நேரில் பார்த்து அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.இது குறித்தான புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.