Tamil Nadu | தமிழ் நாடு
கொரானாவாது பீரனாவாது.. கண்டுகொள்ளாத அஜீத், விஜய்.. இதான் ரசிகர்கள் மேல் உள்ள பாசமா
உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை மக்களுடன் நேரலையில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர் கூறுகையில் தயவுசெய்து யாரும் வெளியே வரவேண்டாம் என்று உருக்கமாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தால் மருத்துவ ரீதியாக பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனால் அனைவரும் முன் வந்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் மட்டும்தான் நோய் பரவாமல் தடுக்க முடியும்.
இந்த சூழ்நிலையில் கோலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் FEFSI ஊழியர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிகபட்ச தொகையாக 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். நேற்றைய தினம் FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் அதை ஏற்றுக்கொண்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இதில் முந்திக்கொண்டு உதவி செய்தது சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து பத்து லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஹரிஷ் கல்யாண் இன்னும் நிறைய பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க மற்றொரு புறம் கோடி கோடியாக சம்பாதிக்கும் தல அஜித் மட்டும் தளபதி விஜய் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர். ஒரு வேளை இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாத அளவிற்கு உதவி செய்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் இவர்கள் உதவி செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தால் மட்டுமே இன்னும் நிறைய பேர் FEFSI ஊழியர்களுக்காக உதவிட முன் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையை காப்பாற்றுவதற்கு நடிகர்கள் உள்ளனர், ஆனால் கல்வி, தொழிற்சாலை பத்திரிகை ஊடகங்கள், சிறுதொழில் முதல் பெரிய தொழில் வரை இருக்கும் ஊழியர்களை அரசு தான் காப்பாற்ற வேண்டும்.
