லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்கும் போது வெட்கமாக இருக்கும் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நிலையில் தற்போது முதன் முறையாக தல அஜித்துடன் இணைந்து விவேகம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கடந்த 2011ம் ஆண்டு தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து தி பிஸினஸ்மேன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் நடித்திருந்த லிப் – லாக் காட்சியை போல எந்த சினிமாவிலும் இதுவரை வரவில்லை. இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் டூ லாப்ஷான் ஹி துகானியா என்ற படத்தில் ரன்தீப் கூடாவிற்கு கொடுத்த லிப் – லாக் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதிகம் படித்தவை:  தல அஜித்துடன் முதல் முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை

காஜலுக்கு, மூத்த நடிகர், இளம் நடிகர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. சமீபத்தி, சிரஞ்சீவியின் கைது நம்.150 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரணுடன் இணைந்தும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் மற்றும் அஜித் நடித்து வரும் படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  முதல் முறையாக தனது காதலரை வெளியுலகத்திற்கு காட்டிய காஜல்.? புகைப்படம் உள்ளே.!

இந்நிலையில் லிப் – லாக் முத்தக்காட்சியில் நடிக்கும் போது தனக்கு கூச்சமாகவும், வெட்கமாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதோடு, அரைகுறை ஆடையுடனும், மெல்லிய ஆடை அணிந்து கொண்டு ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் போது எனக்கு வெட்கம் வெட்கமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். படங்களில் நடிப்பதை விட படக்குழுவினர் மற்றும் பொது மக்கள் முன்பு நின்று ஹீரோவுக்கு லிப் – லாக் முத்தம் கொடுப்பது எவ்வளவு வெட்கமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.