தமிழ் சினிமாவில் கடந்த வருடத்தில் 200 படங்களுக்கு மேல் திரைக்கு வருகின்றன அதேபோல் இந்த வருடமும் பல படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Athulya Riding Royal Enfield

ஜனவரி மாதத்தில் பொங்கல் அன்று சில படங்கள் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது மேலும் 26 ம் தேதி குடியரசு தினத்தில் சில படங்கள் திரைக்கு வருகின்றன.

அவைகள் நிமிர்,மன்னர் வகையறா,பாகமதி, பத்வமாத் என்ற படங்கள் திரைக்கு வருகிறது மேலும் பிப்ரவரி மாதம் 2 ம் தேதி சில படங்கள் திரைக்கு வருகின்றன.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்

vijay sethupathy

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருட முதல் படமாக வெளிவருகிறது ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் படம். இப்படம் ஒரு பாண்ஸ்டஸி கலந்து காமெடி படம். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதிகம் படித்தவை:  விஜயசாந்தி போல் பெயர் வாங்க த்ரிஷாவுக்கு ஆசை!

இந்நிலையில் சென்சார் குழு “யு” வழங்கி குடும்பத்தோடு கொண்டாடும் படமாக உள்ளது என பாராட்டியுள்ளனர். மேலும் வருகிற பிப்ரவரி 2 ம் தேதி உலகமெங்கும் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர் . மேலும் இவர்கள் படத்தில் விஜய் சேதுபதியின் 11 கெட்- அப்களை போஸ்டராக ரிலீஸ் செய்துள்ளனர்.

மதுர வீரன்

Captain Vijayakanth, Shanmuga Pandian, PG Muthaiah

‘சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மதுரவீரன்’.இப்படம் பிப்ரவரி2  அன்று ரிலீஸ் ஆகிறது.

வி ஸ்டுடியோஸ் மற்றும் பி.ஜி.முத்தையா ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். பி..ஜி.முத்தையா அவர்கள் ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  ஒரே நேரத்தில் 35 படங்கள் ! தல அஜித்தின் விசுவாசம் தான் இவரின் 100 வது படமாம் !

படைவீரன்

Padai-Veeran

விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “படைவீரன்”. இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் பாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் . இயக்குனர் மணிரத்னம் அவர்களின் உதவியாளர் தனா இயக்கும் படம் படைவீரன்.இந்த படம் வரும் பிப்ரவரி 2 ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஏமாலி 

லதா புரொடெக்சன்ஸ் சார்பில் எம்.லதா, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஏமாலி’. சமுத்திரக்கனி இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் மற்றும் அதுல்யா ரவி நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான V.Z.துரை, இந்த ‘ஏமாலி’ படத்தை இயக்குகிறார்.இந்த படமும் பிப்ரவரி 2 ம் தேதி திரைக்கு வருகிறத்து.